மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்' என்றார்கள். (புகாரி : 6777)


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) 'அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உன் தாய் பிறகு உன் தாய் பிறகு உன் தாய். பிறகு உன் தந்தை. பிறகு உனக்கு மிகவும் நெருக்கமானவர். (அடுத்து) உனக்கு மிகவும் நெருக்கமானவர்' என்று விடையளித்தார்கள். (புஹாரி : 4980)


மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ அதனை (அடைய வேண்டுமென்று) பேராசைகொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு (அவ்வாறே) பெண்களுக்கும்இஅவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (4:32)


தலைப்பிறை செல்லுபடியாகும் எல்லைக்கோடு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறைக்கு தேசியரீதியாகவோ பிராந்திய ரீதியாகவோ எந்தவொரு நில அளவீட்டையும் இடவில்லை. மாறாக மாதநாட்களின் ஆகக்குறைந்த எண்ணிக்கை 29நாட்கள் என்றும் 29நாட்களை முடித்தவர்கள் பிறைகண்டால் நோன்புநோற்பதும் இல்லையேல் 30நாட்களாக பூர்த்தி செய்வதும் தான் நபிகளார் வகுத்த அளவீடாகும்.


(வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் அன்சார் (தப்லீகி)

வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக் கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக் கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான் போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை.

மேலும் வாசிக்க....


(ஏகத்துவ) மார்க்கம் என்ற போர்வைக்குள்) - அப்துல் ஹமீட் (ஸரயி)

பணம், பணம், பணம் இதை சம்பாதிக்க பல வழிகள். இஸ்லாம் அனுமதித்த, அனுமதிக்காத என இரண்டு வழிகள். அதிலும் வட்டி , சூது என ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்த புழித்துப்போன செய்திகளை எழுதி இந்தப் பத்திரிகையின் பக்கங்களை நான் நிறப்பவில்லை.

ஹலாலாக சம்பாதிக்க வேண்டும் என்று கோசங்கள் எழுப்பி மக்கள் மனங்களை வெல்லும் உலமாக்கள் மற்றும் மார்க்கப் பிரச்சாரகர்கள், சமூக சேவையாளர்கள் என ஒருபட்டியலையே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். இவர்களில் முகமூடி அணிந்த சில முல்லாக்களும் முக்காடு களையாமல் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையே உங்களுக்கு நான் அடையாளப்படுத்தப்போகிறேன்.

மேலும் வாசிக்க....


ரமழான் மாத தொடர் உரைகள்
இந்த வருட ரமழான் மாத இரவுகளில் அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையம் சார்பாக அஹ்லுஸ் ஸுன்னா ஜும்மா பள்ளிவாயலில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பதிவேற்றியிருக்கின்றோம். பார்த்து பயன் பெறும் அதே வேளை சக நண்பர்கள், உறவினர்களுக்கும் இவற்றை பகிருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

உரை : அன்சார் (தப்லீகி)
இஸ்லாமிய யுத்தங்களும் ஸஹாபாக்களின் தியாகங்களும் பாகம் - 04 (பத்ர் யுத்தம் - 02)
இஸ்லாமிய யுத்தங்களும் ஸஹாபாக்களின் தியாகங்களும் பாகம் - 03 (பத்ர் யுத்தம் - 01)
இஸ்லாமிய யுத்தங்களும் ஸஹாபாக்களின் தியாகங்களும் பாகம் - 02
இஸ்லாமிய யுத்தங்களும் ஸஹாபாக்களின் தியாகங்களும் பாகம் - 01