மார்க்க உரை

தலைப்பு - இரவுத் தொழுகை எத்தனை ரகாஅத்கள்?
உரை நிகழ்த்துபவர் : அப்துல் ஹமீட் (ஸரயி)

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:
"நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினனொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று கூறினார். (Sahih Bukhari Book :31 : 2013)