மார்க்க உரை

தலைப்பு - இலட்சியப் பயணத்தை முடித்து விட்டீர்களா?
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் நல்வழி பெற்ற நாம் நமது சொந்த இலாபங்களுக்காக இஸ்லாமிய மார்க்கத்தை தேவைக்கேற்றாற்போல் வளைப்பதற்கான காரணம் தான் என்ன? ஏகத்துவத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு பித்அத்தும் கண் முன்னே அரங்கேறிவிடக்கூடாது என்று தடுத்த எங்களில் சிலரோ தற்போது சோர்ந்து போகக் காரணம் தான் என்ன? நமது இலட்சியப் பயணத்தை முடித்து விட்டோம் என்ற எண்ணமா? அருகிப் போன பித்அத்தான நடைமுறைகளை எம்மை மீண்டும் சூழ்ந்து கொள்கிறதே.. ஏகத்துவம் பேசிய மௌலவிமார்களே எங்கே போய்விட்டீர்கள்? போதித்தது போதும் இனியும் வேண்டாம் வம்பு என்று இவ்வுலகில் மூழ்கி விட்டீர்களா? நம் அனைவரையும் விழித்து பேசும் பயான் இது கட்டாயம் பார்த்து பயன் பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.