மார்க்க உரை

தலைப்பு - இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப சமூக பொறுப்புக்கள் :
உரை நிகழ்த்துபவர் : மௌலவி பீர் முஹம்மது (காஸிபி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்' என்று கூறியது. 'உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்' என்று கூறினான். (Sahih Bukhari Volume :5 Book :65 : 4830).