மார்க்க உரை

தலைப்பு - குர்ஆன் வசனங்கள் அன்று சஹாபாக்கள் மத்தியிலும் இன்று எம்மிடத்திலும்
உரை நிகழ்த்துபவர் : உம்மு மர்யம் (ஷரயியா)

நபியவர்களின் பாசறையில் வழர்ந்த சஹாபாக்களிடம் ஓர் அல்குர்ஆனிய வசனம் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அதனை தனது வாழ்வில் எடுத்து நடப்பவர்களாகவும் அந்த வசனத்தின் படி தம்மை மாற்றிக் கொள்பவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால் இன்று நம் சமுதாயம் அதே குர்ஆன் வசனத்திற்கு தரும் மதிப்பை விட உலக காரியங்களுக்காக தரும் மதிப்பே மிக அதிகமாக உள்ளது. சுவர்க்கம் நுழைவிக்கக் கூடிய அல்லாஹ்வின் வேதக் கல்வியை மறந்து உலகக் கல்வியின் பால் செல்பவர்களாகவும், வல்ல இறைவனுக்கு இணை கற்றபிப்பவர்களாகவும் வாழ்கின்றனர். எனவே நாம் எவ்வாறு வழி கெட்டு போகின்றோம் என்று இந்த உரையை பார்த்து விளங்கிக் கொள்வோமா?