Tags : ஆசிரியர் பஹீம் தாலிப்

குழப்பம் கொலையை விட பெரிது


 இஸ்லாத்துக்கு முன்னும்  இஸ்லாத்துக்கு பின்னும் 

யார் எவர் இஸ்லாத்துக்கு பின் ஷஹாதா கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் அவர் முஸ்லிமாக ஆகிவிடுகிறார் யார் எவர் இஸ்லாத்திற்கு முன் ஜாஹிலிய்யத்தில் இருந்தார்களோ அவர்கள் காபிர்கள் இப்படி அழைத்ததை ஹதீஸ் வரலாற்றில் காணலாம் மக்கத்து காபிர்கள் என்று அழைக்கப்பட்டது.

அதனால் தான் அபூதாலிப் இஸ்லாத்துக்கு பின்னும் காபிராக மரணித்தார் அவர் நபியவர்களுக்கு உறுதுணையாக இருந்தாலும் கூட அவர் கடைசி வரை இஸ்லாத்தை ஏற்க வில்லை 

இன்று இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து ஒருவர் மற்றவரை பார்த்து காபிர் என்று  அழைப்பது சாதாரண விடயமாகி விட்டது இந்த நிலை ஏன் ஏட்பட்டது ?

ஊர்களில் கிராமங்களில் காலா காலமாக தொழுது வந்த பள்ளிவாசல்களில் இருந்து வேறு பட்டு தன்னுடைய கொள்கைக்கு ஏற்றவாறு புதிய தனிப்பள்ளிவாசல் அமைப்பதற்கு  என்ன தேவை?

மார்க்கத்தின் பெயரால் ஒரு சாரார் மற்றைய சாராரை பார்த்து கேலிசெய்வது கேவலப்படுத்துவது மற்றுமில்லாமல் நேராக சண்டை செய்து கொலைபண்ணும் அளவுக்கு என்ன தான் இந்த மார்க்கத்தில் இருந்து பிழையாக விளங்கிக்கொண்டு இருக்கிறார்கள் ?

முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து முஸ்லீம் சமுதாயத்தில் வளர்க்கப்பட்ட முஸ்லிம்கள் எப்படி காபிராக முடியும் ?

தர்கா  (தாக்கியா) கபுறு வழிபாடு மற்றும் அல்லாஹ்வுக்கு ஷிர்க் செய்யக்கூடிய இடங்கள் மற்றும் கபுறு இருக்கக்கூடிய பள்ளிவாசல்களை தவிர ஏனைய பள்ளிவாசல்கள் அல்லாஹ்வை வழிபட தகுதியான பள்ளிவாசல்கலாகும் இத்தகைய பள்ளிவாசல்களில் இருந்து இஸ்லாம் தெளிவாகத்தான் பின்பு ஒரு சாரார் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்காக புதிய பள்ளிவாசல்கள் அமைத்து   பித்அத்ஆன விடயங்கள் அதாவது இஸ்லாத்துக்குள் புதிதாக நுழைக்கப்பட்ட மார்க்க வழிபாடுகளில் இருந்து தவிர்ந்து நபி வழியை மட்டும் பின்பற்றி அதனுடாக பிறரையும் ஷிர்க் பித்அத்தில் இருந்து நேர்வழிப்படுத்த எடுத்துக்கொண்ட வழிமுறை நல்ல விடயமாக தென்பட்டாலும் இதன் விளைவு முஸ்லிம்களை பல பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எதிரிகளாகி முழு முஸ்லீம் சமுதாயம் சின்னா பின்னமாகப்பட்டு விட்டது இது யார் பிழை ஏன் இந்த நிலையில் இருந்து களைய முடியாது?

 புதிய பள்ளிவாசல் கட்டி பிரிந்து போனவர்களை பற்றி எடுத்துக்கொண்டால் அவர்கள் முன்னவைக்கும் காரணங்கள்.

அல்லாஹ்வுடைய ஷிபத்தை மறுக்க கூடியவர்களுடைய பின்னல் நின்று தொழ முடியாது பித்அத்ஆன செயல்கள் நடக்கும் இடத்தில எப்படி வாய்முடி இருப்பது மற்றும் நபியவர்கள் பிரிந்து தான் இஸ்லாத்தை உருவாக்கினார்கள் . தந்தை இடம் இருந்து மகனையும் தாயிடம் இருந்து மகளையும் மனைவியிடம் இருந்து கணவனையும் இப்படி குடும்பங்களில் இருந்து ஒவ்வொருவரையும் பிரித்து எடுத்து தான் இஸ்லாமிய சமுதாயம் உருவாக்கப்பட்டது. அதனால் பிரியாமல் ஒன்று பட முடியாது என்ற கருத்தை காரணங்களை முன்வைக்கிறார்கள் . இந்த நிலை இஸ்லாத்துக்கு பின் இஸ்லாமியர்களாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு  பொருத்தமாகுமா ? இஸ்லாத்துக்கு முன் ஜாஹிலிய்யத்தில் இருந்த சிலை வணக்க வழிபாடு செய்து கொண்டிருந்த மக்கத்து காபிர்கள் இன்றைய முஸ்லிம்களுக்கு நிகராகுமா ? இஸ்லாம் தெளிவானதன் பின் முஸ்லிம்களுக்கு பிரிந்து போக என்ன தேவை இருந்தது? ஜாஹிலிய்யத்தில் இருந்து எடுக்கப்பட்ட அளவுகோல் எப்படி இஸ்லாமியர்களுக்கு பொருந்தும் ? இதற்கு பதில் கண்டாலே பிரிவினையில் இருந்து களைந்து ஒன்று பட முடியும் 

இஸ்லாத்திற்கு முன் மக்கத்துக் காபிர்கள் புனித கஃபாவினுள்  360 சிலைகளை வைத்து அதனை வணங்கியவர்கள்.   இஸ்லாம் வந்ததன் பின் அழைப்புப்பணி செய்தார்கள் . அதன் மூலம் ஒரு பாரிய சமுதாயத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் உருவாக்கியதன் பின் நாம் எல்லோரும் அதனை தொட்டும் முஸ்லிம்களாக பிறந்து முஸ்லிம்களாகவே வளர்க்கப்பட்டு  இன்று நவீன உலகின் தொழிநுட்ப சாதனங்களுடன் இணைந்து வாழும் காலகட்டத்தில் இருந்துகொண்டு இருக்கிறோம்.

இந்நிலையில் இஸ்லாம் எங்கள் கைகளில் மிக இலகுவாகவும் தெளிவாகவும் உள்ளங்கைகளில் கிடைக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம். இதன்மூலம் இஸ்லாமிய அறிவு சாதாரண மனிதர்களுக்கு விளங்கும் அளவுக்கு பல மொழிகளிலும் கிடைக்க கூடியதை நாம் அறிவோம் இன்றய உலமாக்களின் அவசியம் தேவை அற்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது

ஆனால் 30 வருடங்களுக்கு முன் உலமாக்கள் மட்டும் தான் இஸ்லாத்தை சரியாக விளங்க வழி  இருந்தது இஸ்லாம் படித்தவர்கள் அவர்களுடைய காலத்தை செலவு செய்து இஸ்லாமிய அறிவை கற்றதன் பின் அவர்கள் பொருளாத ரீதியாக பாதிக்கப்பட்டு தொழில் செய்யும் திறனை இழந்து வாழ வழி இல்லாத நிலையை அடைந்த போது அவர்கள் கற்றுக்கொண்ட மார்க்கத்தை தெளிவாக மக்களுக்கு எத்திவைக்க மறுத்தார்கள். அதனை  தாங்கள் கற்ற இஸ்லாத்தை மூலதனமாக கொண்டு வியாபாரமாகிக் கொண்டார்கள் . மார்க்க தீர்வுக்கு  உலமாவிடம் இருந்து பெறவேண்டும் என்ற நிலைமை உருவாகியது . உலமாக்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி பொம்மை போல் பணவசதி இருந்தவர்கள் செய்து மற்றவர்களுக்கும் செய்ய  வழிகாட்டியதன் விளைவு இன்று தாய் தந்தைகளுடைய மார்க்கம் வாழையடி மார்க்கம்  என்று சொல்கிறோம். இதில் நிறைய விடயங்கள்  பிற மதத்தின் சடங்கு சம்பிரதாயங்களை காபி அடித்து இஸ்லாத்துக்குள் நுழைக்கப்பட்டது. 

இதனை இஸ்லாத்தை சரியாக குரான் ஹதீஸ் மூலம் கற்க வழிகிடைத்தான் பின் அறிந்து கொண்ட மக்கள் பிரச்சாரம் செய்ய முட்பட்டதன் பிரதி பலன் தான் இன்று இஸ்லாம் இன்னும் தெளிவாக விளங்கிவிட்டது பழங்கால மக்களிடம் உலமாக்களை பார்த்து கேள்வி கேட்க இஸ்லாமிய அறிவு இருக்க வில்லை உதாரணத்துக்கு சொல்லப்போனால் பொதுவாக எங்கள் தாய் தகப்பன் சொல்லக்கூடிய ஒரு விடயம் குரான் எல்லோராலும் விளங்க முடியாது' அதற்க்கு மௌலவிப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். நாங்கள் விளங்க போனால் தவறாகி விடும் என்று. இன்று இந்த கேள்விக்கு சிறு பிள்ளை பதில் கொடுத்து விடும் . அப்படி என்றால்  விளங்காத குரானை எங்களுக்கு இறக்கி விட்டு எங்களை நரகில் போட்டால்  அல்லாஹ்வை  விட அநியாய காரன் வேறு யாராக இருக்க முடியும்!. ? 

மார்க்கத்தை கற்ற மௌலவி மார்கள் மட்டும் தான் சொர்க்கம் போக முடியும். ஏனைய சாதாரண முஸ்லிம்களின் நிலை தான் என்ன ?  உண்மையில் குரான் அப்படி பேசுமா? உண்மை என்ன? 

குரான் பேசுகிறது இந்த குரான் விளங்க மிக இலகுவானது மனிதர்களுடைய நடைமுறை பாசையில் இறக்கப்பட்டது என்று  மௌலவி பட்டம் பெற்றிருந்தால் மட்டும் தான் குரான் விளங்க இந்த குரான் முஸ்லிம்களுக்கு மட்டும் இறங்கியது கிடையாது முழு மனித சமுதாயத்துக்கும் இறக்கப்பட்ட மனித வழிகாட்டி, மௌலவி மார்கள் மட்டும் தான் விளங்க முடியும் என்றால் எப்படி மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தழுவுவார்கள் ? இன்று தொலைக்காட்சிகளில் காணக்கூடிய ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பற்றி தெளிவு படுத்தும் உலமாக்கல்களில் அதிகமானோர் குரானை கொண்டு இஸ்லாத்தை தழுவியவர்கள் (பிலால் பிலிப்ஸ், யூசூப் எஸ்டேஸ் , அப்துர் ரஹீம்  கிறீன் இன்னும் சொல்லிக்கொடு போகலாம். 

இன்று நவீன தொழினுற்பத்தால்  இஸ்லாம் ஒன்று திரட்டப்பட்டு இலகுவாக யாராலும் இஸ்லாத்தின் கோட்பாட்டையும் அதன் தூய்மையான வடிவத்தையும் சரியான சட்டங்களையும் சரியான வழிபாட்டு முறைகள்  நேரடி உலமக்களின் உதவி இன்றி ஒரு முழு முஸ்லிமாக வாழ எமக்கு வழிகாட்டியுள்ளது. எமது தாய் தந்தை முதாதயர்கள் காலத்தில் இஸ்லாம் ஒன்று திராட்டப்படாதால்  ஒரு உலமாவுக்கு  தெரிந்த மார்க்க விடயங்கள் சட்டங்கள் வேறு ஒரு இடத்தில் இருக்கும் உலமாவுக்கு கிடைப்பது கடினமான விடயமாக இருந்தது .புகாரி, முஸ்லீம், திர்மீதி , இபுனு மாஜா, நஸாஹி போன்ற ஏராளமான ஹதீஸ் கிரந்தங்கள் உலகில் விரிவடையாத காலம்  அதனால் தான்  இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்று விட்டது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் மார்க்கமாக வழிபடுவதை விட கலாச்சாரமாக தான்  இருந்தது. இந்நிலை இன்று மாற்றப்பட்டு இருட்டில் இருந்த இஸ்லாம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டது. வெளிச்சம் வந்ததும் நடுநிலையாக சிந்திக்க கூடிய மக்கள் பிழையான மார்க்க விடயங்களில் இருந்து களைந்து குரான் ஸுன்னாஹ் மட்டுமே எமது மார்க்கம் என்று விளங்கி ,அதன்படி தானும் வாழ்ந்துகொண்டு பிழையான மார்க்கத்தில் இருக்கும் தன்னை சூழ  இருக்கும் மக்களையும் நேர்வழிப் படுத்த எடுத்த முயற்சிகளில் நாம் இன்று எதிர் நோக்கிக் கொண்டு வரும் பிரச்சினை பிரிவினை. இந்த நிலைமை உருவாக யார் தான் காரணம் ? எங்கு பார்த்தாலும் மௌலவிமார்கள் தான் காரணம். இந்தநிலை உருவாக அன்று மார்க்கத்தை கற்ற மௌலவிமார்கள் மார்க்கத்தை தன்னுடைய காலத்தை செலவு செய்து கற்றது போல் இன்றும் இருக்கக் கூடிய அதிலும் குரான் சுன்னாஹ் வாதிகள் என்று தங்களை அறிமுகப் படித்துக்கொண்டு இருக்கும் மௌலவிமார்கள் தங்கள் கற்ற மார்க்க அறிவை கொண்டு தன்னுடைய கலத்தை உருவாக்கியதில் மிக குறியாக இருந்து கொண்டு எப்படியாவது தன்னுடைய இடத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்துக்கொள்ள படுகிற பாட்டால் தான் இன்று முஸ்லிம்கள் பிரிந்து சிதறிப்போய் இருக்கிறது. 

ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் மௌலவி மக்கள் மற்றும் உலமாக்கள் ஆன்மீக தலைவர் அல்ல இவர்கள் மார்க்கத்தை பல்வேறுபட்ட இடங்களில் அவரவார் கற்ற கல்விக்கூடங்களிக்கு ஏட்ப  அதன் அச்சில் வார்த்து எடுக்கப்பட்ட மௌலவியாக வெளியானோர்கள். இவர்கள் இஸ்லாமிய அறிவும் விளக்கமும் ஒன்று பட வாய்ப்பு கிடையாது. இவர்களை நாம் ஏனைய தொழில் புரியும் மக்களை போல் எடுத்துக்கொண்டால் எந்த பிரிவினையும் இல்லை உதாரணத்துக்கு சொல்லப்போனால் நாட்டின் சட்டங்களை படித்தவர்கள் சட்டத்தரணி, மோட்டார் வண்டி திருத்துபவர் கார் மெக்கானிக், நோய் குணப்படுத்துபவர் வைத்தியர், இதுபோல் இஸ்லாத்தை கற்றவர் மௌலவி எனவே தனக்கு சுகயீனம் வந்தவுடன்  வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதுபோல் மார்க்கத்தில் தெளிவு  பெற மௌலவி இடம் கேட்டு  தெரிந்து கொள்வதுடன்  நிறுத்திக்கொண்டால்  நாம் ஒற்றுமையாக இருக்க முடியும். எப்படி வைத்தியருடன் சிகிச்சைக்கு பிறகு எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்க முடியுமோ அப்படி இருந்து கொண்டால் மார்க்கத்தினால் பிளவுபட அவசியம் இருக்காது. எல்லா வைத்தியர்களும் ஒரேமாதிரி சிகிச்சை செய்ய மாட்டார்கள் .சிலருக்கு குணம் கிடைக்கும் சிலருக்கு குணம் கிடைக்காது எனவே எல்லோரும் திறமைசாலி என்றும் எல்லோரும் திறமை இல்லை என்றும் யாராலும் சொல்ல முடியாது  

ஒற்றுமையாக இருந்த ஊர் மக்கள் இன்று பிளவுபட்டு பத்து பெயருக்கு ஒரு ஜமாத் என்ற நிலைமை உருவாகி  விட்டது .இந்த நிலையில் இருந்து களைய நாம் காலா கால மாக தொழுதுவந்த ஊர் பள்ளிவாசலில் ஒற்றுமையாக தன்னுடைய தெளிவான குரான் சுன்னாஹ் அழைப்பு பணியை அவர்களோடு ஒற்றுமையாக இருந்து கொண்டு ஒரே பள்ளியில் தொழுதுகொண்டு இஸ்லாத்தை சீர்திருத்தி இருந்தால் இன்று முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்திருக்கும். தன்னுடைய தெளிவை பிறருக்கு ஏத்தி வைத்தவுடன் எங்களுடைய கடமை முடித்து விடுகிறது அதற்கு  பின் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள விடயம்.

இன்று குரான் சுன்னாஹ் பேசக்கூடிய மௌலவி மார்கள் முஸ்லிம்களை பிரிப்பதில் குறியாகவே இருக்கிறார்கள். தன்னுடைய கருத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க ஒருவருக்கு ஒருவர் கலத்தில் தர்க்கம் புரிந்து கொண்டு முஸ்லீம் உம்மத்தின் ஒற்றுமையை குழப்புவதில்  மிக கவனமாக செயல் பாட்டுக்கொண்டு இருப்பது ஒருபுறம். இன்னொரு சாரார் தான் கற்ற மார்க்கத்தை பணமாக்கும் நோக்கத்தில் குறியாகவே இருந்துகொண்டு பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பண உதவிகளை பெற்று அப்பணத்தை கொண்டு அதனை நிர்வாகிப்பவர்கள். முதலில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு மிச்சம் மீதியுள்ள பணத்தால் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட மௌலவி மார்களுக்கு சம்பளம் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து தங்களுடைய செயல்களை ஆதரிக்கும் தலையாட்டி பொம்மையாக அடிமையாக வைத்திருப்பதை காணலாம். இவ் விடயங்கள் வெறும் யூகத்தில்  சொல்வது  இல்லை. பல ஆதாரங்கள் கண்கூடாக கண்டு சிந்தித்ததன் பின் என்னால் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது அவர்கள் தடுமாறி திக்கி திணறி  பதில் கொடுத்த விதம் என்னை இன்னும் சிந்திக்க வைத்து அவர்களை பற்றி கூடுதலாக ஆராய்ந்தான் பின் அவர்கள் செய்வது  பிழையான சுரண்டல் எண்டு தேற்றத் தெளிவாகத்தான் பின் தான் இவைகளை பற்றி எழுத ஆரம்பித்தேன் உதாரணத்துக்கு உங்களுக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தின் தலைவரை எடுத்துக்கொண்டால், அவர் நடத்தும் நிறுவனத்தில்  இருந்து சம்பளமாக பெரும் தொகையை அவரிடம் கேட்டு அந்த சம்பளத்தை கணக்குப்போட்டு பார்த்தால் அவருடைய வாழ்ந்து  கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது. மாத சம்பளம் ஒரு இலட்ஷமாக  இருந்தால் அவர் மாதாந்த செலவு மூன்று இலட்ஷமாக  இருக்கும். சிலர் நான் வியாபாரம் செய்கிறேன் அதனால் எனக்கு நல்ல வருமானம் வருகிறது நிறுவனத்தில் கிடைக்கும் பணம் மட்டும் அல்ல என்று  சொல்வார்கள் இவர்களுக்கு வியாபாரம் செய்ய எப்படி பணம் இவர்கள் வாப்பா மக்கள் பணக்காரர்களா ? இல்லை நிறுவனம் நடத்துபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்தவர்கள் அதனால் தான் அவர்களால் அரபு மொழி பேசமுடியும் அரபி மொழி  பேச முடிந்ததால்தான் அரபிகளிடம் அரபியில் கதைத்து இப்படி பட்ட நிறுவனங்கள் உருவாக்கியது. வாப்பா (தந்தை) பணக்காரனாக இருந்தால் ஏன் மகன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காரனாக வேலை செய்ய போக வேண்டும்? பரம்பரை பணக்காரனாக  இருப்பவர்கள் ஒருபோதும் நிறுவங்கள் அமைத்து அரபிகளிடம் இருந்து பணம் பெற்று மக்களுக்கு சேவைசெய்ய முட்படமாட்டார்கள். அப்படி எந்த பணக்காரனுக்கு பண்ணினது கிடையாது. எனவே வாழ வழியில்லாமல் சவூதி போய் வேலை செய்த இவர்கள் திடீர் என்று நிறுவனம் உருவானதும் தானும் சீமானாகி விடுகிறார் இவர்கள் சீமானாக இலங்கையில் உள்ள முஸ்லிகளையும் அவர்களுடைய ஒற்றுமையையும் பலிகொடுக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் இத்தகைய நிர்வாணங்கள் களையப்பட வெண்டும் இவர்களுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்த வேண்டும்.

ஒற்றுமை என்ற கோஷத்துக்குள் ஷியாக்களுக்கு துணைபோகும் கூட்டத்தினருக்கு நான் சொல்லக்கூடிய ஒற்றுமை பொறுத்தமாகாது.

ஒற்றுமை என்னும் கோஷ  கொடியை பிடித்திருக்கும் இன்னொரு சாரார் ஷிர்க்  பித்அத் மற்றும் அல்லாஹ்வுடைய ஷிபத்துகளை  மறுக்கக்கூடிய இடங்களில் அவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய பிழையான மார்க்க வழிபாட்டை அவர்களை போலவெ அவ்விடத்தில் மட்டும் செய்து நாமும் உங்கள் கட்சிதான் என்று சொல்லிவிட்டு அவர்களை இவர்கள் ஏமாற்றி  விட்டு ,திரும்ப இன்னொரு இடத்தில்  வே -றுப்பட்ட பிழையான மார்க்க வழிபாட்டிலும் கலந்து  கொண்டு அங்கேயும் இவர்களுடைய நாடகத்தை அரங் கேற்றி  விட்டு வரக்கூடிய பச்சோந்திகள் ஜாமத்தினருக்கு நான் பேசக்கூடிய ஒற்றுமை பொருந்தாது.

இஸ்லாம் அதன் தூய வடிவில் விளங்கிக்கொள்ள நாம் ராக்கெட் விடும் விஞ்ஞானம் கற்க அவசியம் கிடையாது நம்முடைய சிந்தனையை நாடு நிலையாக வைத்துக் கொண்டால்  அதுவெ உங்களை நேர்வழியில் இட்டுச்செல்லும் உலமாக்களின் ரசிகனாக இருந்தது போதும் இனியாவது உலமாக்களை வைத்தியராக பார்த்தாலே ஒற்றுமை வந்துவிடும் எப்போதும் முஹம்மது நபியவர்களுடைய ரசிகனாக இருக்க  முயற்சி  செய்வோம்.  .