தலைப்பு - தொழுகையை விட்டவனின் அவலநிலை
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தினுடைய பிரதான பள்ளியில் 2015.10.30 அன்று இடம் பெற்ற குத்பா உரை.
எனக்கு யக்கீன் வந்து விட்டது நான் தொழத் தேவையில்லை என்று வீண் விவாதம் புரிந்து கடமையான தொழுகையை அன்றாடம் தொழாமல் இருக்கும் அன்பர்களுக்கும் தொழுகையில் பொடுபோக்காக இருக்கும் அன்பர்களுக்கும் இந்த உரை சமர்ப்பணம்..
இவ்வுரையில் யக்கீன் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? தொழாதவருக்கு அல்லாஹ் தரும் தண்டனை என்ன? ஸஹாபாக்களின் காலத்தில் தொழாதவர்களுக்கு எதிராக எவ்வாறான வழிமுறைகளை பின்பற்றினார்கள்?. இவ்வுலகில் தொழாமல் இருந்து மரணிக்கின்ற ஒருவரை முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யலாமா? போன்ற மேலும் பல விடங்களை பற்றி அலசுகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.