பெண்களின் முகத்  திரை 

ஆசிரியர் பஹீம் தாலிப் 


பெண்கள் முகம் மூடும் விடயத்தில் மௌலவி மார்கள் முன் வைக்கும் இரண்டு விடயங்கள்

ஒன்று மூமினான ஆண்களும் மூமினான பெண்களும் பார்வையை  தாழ்த்தும் படி வந்தது இன்னொன்று நபிமார்களுடைய மனைவிமார்களுக்கு முகம் மூடும் படி இரங்கிய சட்டம்.  இதில் எது  பொது சட்டமாக பெண்கள்  சமுதாயத்துக்கு பிறப்பிக்கப்பட்டது ?

பெண்கள் முகம் மூடுவது அவர்கள் விரும்பியோ அல்லது கணவனின் கட்டாயப்படுத்தியோ ஒரு நிர்பந்தத்தில் எதோ இஸ்லாத்தை நூலுக்கு நூல் பின்பற்றி விட்டது என்று  ஒரு கூட்டமும் இன்னொரு கூட்டம் அன்னிய ஆண்களின் பார்வை அவர்களை பார்த்துவிடக்கூடாது என்றும்  முகத்திரையை அணிவது வழக்கம் ..

இஸ்லாம் பெண்கள் விடயத்தில் மிக தெளிவாக குர்ஆன்   மூலமாகவும் ஹதீஸ் மூலமாகவும் வாழ்க்கை நெறி முறைகளை மிக அழகாக எங்கள் உத்தம தலைவர் முஹமது நபி (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றுள்ளார். எனவெ இதில் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. பெண்கள் முகத்  திரை சம்பந்தமாக பெண்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு கட்டளையும் பிறப்பிக்க வில்லை. நேரடியான ஒரு ஹதீஸும் கிடையாது .

நபி (ஸல் ) அவர்களின் மனைவி மார்கள் அதாவது இந்த உம்மத்தின் தாய் மார்கள் அவர்களுக்கு அல்லாஹ் தஆலாவினால் கட்டாயமாக்க பட்ட சட்டமாகும் .

சாதாரணமான  பெண்களுக்கு கட்டாயப் படுத்த படாத சட்டமாகும்.

பிறகு எப்படி எந்த ஹதீஸ்ஸை வைத்துக்கொண்டு அல்லது எதிலிருந்து சட்டத்தை பிடித்தார்கள்?

நபிமார்களுக்கு மட்டும்  என்று அல்லாஹ்  சிலவைகளை சட்டமாக்கினான். அதேபோல் நபியவர்கள் சிலவிடயங்களை தான் மட்டும் வணக்க வழிபாடாக  செய்தார்கள்.

அதில் சிலவற்றை

தொடர்ந்து நீண்ட காலம் நோன்பு நோற்றல்  இடையில் எந்த வித உணவும் உண்ணாமல் நாங்கள்  நோக்கும் நோன்பு போல் அல்லாமல்.  அதே போல் ஸலாம் கொடுக்காமல்  ஏழு ரகஹ் ஒன்பது  ரகஹ் என்று நிறைய தொழுது இருக்கிறார்கள்.

நபி அவர்களுடைய மனைவி மார்களை அவரின் மரணத்திக்கு பிறகு  யாரும் மணம்  முடிக்க கூடாது அதேபோல் தான் நபியவர்கள் ஏழு திருமணம் ஒரே நேரத்தில் மண ந்திருந்தார் இன்னும் சொல்லப்போனால் பைத்துல் மகால் இருந்து அவர் பணம் திரட்ட வில்லை ஹராமாக பட்டது இன்னும் சொல்லிக்கொண் டு போகலாம்.

நபிமார்களுடைய மனைவி மார்களுக்கு இறங்கிய இச் சட்டம்

(குரான் வசனம்) இறங்கிய பொது நபியவர்கள் இச் சட்டத்தை ஏனைய சட்டங்கள் இறங்கிய பொழுது மக்களுக்கு அமுல் படுத்திய போல் ஏன்  அமுல் படுத்த வில்லை ?

 இது போக நபி(ஸல் ) அவர்கள் நபியாக வாழ்ந்த 23 வருட காலத்தில் ஒரு செய்தியாவது காணமுடியவில்லை பெண்களை பார்த்து பெண்களே உங்கள் முகங்களை மூடிக்கொள்ளும் படி

அதேபோல் நிறைய பெண்களின் விடயத்தில் சின்ன சின்ன விடயங்களை எல்லாம் துருவி துருவி அடையாளம் கண்டு சட்டமாகிய  நபி (ஸல் )அவர்கள் ஏன்  முகத்  திரை சம்பந்தமாக எதுவுமே சொல்லாமல் போய்ட்டார் ? நபி(ஸல் ) அவர்களுக்கு மறந்து போய்ட்டதாகவும் அதனை இன்றைய மௌலவி மக்கள் நபிக்கு ஞாபகப்படுத்தியது போல் இருக்கு கதை.

பரவலாக பெண்கள் சம்பந்தப்படும் பெண்ணின் முகத்தின் அடையாளம் தெளிவாக ஹதீஸ்களில் பதிவுசெய்து இருப்பதை  நபி மொழிகளில்  ஏராளமாக காணப்படுவது யாரும் அறிந்த உண்மை 

உதாரணமாக : முகம் கருத்த பெண் என்றும் வயதான பெண் என்றும் இளம் பெண் என்றும் அழகிய பெண் என்றும் இவைகள் முகம் மூடியிருந்தாள் எப்படி நபியவர்கள் அடையாளம் காட்டியது ?

ஆண்களுக்கு முதல் பார்வை மட்டும் தான்  ஹலால் ஆகும். இரண்டாவது பார்வை ஹராமாகி  விடுகிறது. முகம் மூடி இருந்தால் இந்த ஹதீஸ் வந்தே இருக்காது . முகம் மூடி இருந்தால்  முகத்தை எத்தனை தடவை பார்தாலும்  ஒன்றுமே தென்படாது.

இந்த சட்டத்தில் இருந்து முகத்திரை இன்று சட்டம் பிடிக்கும் மௌலவி மார்கள் நபியவர்கள் மட்டும் செய்த விடயங்களான உண்ணாமல் பருகாமல் தொடர்ந்து நீண்ட காலம் நோன்பு நோக்க வே ண்டும் .அப்படி நோன்பு நோக்க இந்த மௌலவி மார்களால் முடியுமா ?

நபியவர்களுக்கு மட்டும் சட்டமான சில விடயங்களில் இருந்து ஒன்றை மட்டும் பொது சட்டமாக எடுப்பது எப்படி சரியாகும்  ?

மூமினான ஆண்களும்  மூமினான பெண்களும் பார்வையை  தாழ்த்தி கொள்ளட்டும்  இதிலிருந்து சட்டம் படிக்கும் மௌலவி மக்கள் தாங்களும் முகத்திரை அணிய வேண்டும்   பெண்களை போ லவெ,  ஏன் பெண்கள் மட்டும் முகத்திரை அணிவது ?  மூமினானன பெண்களுக்கு மட்டும் தானா  சட்டம் இறங்கியது ?

பார்வை தாழ்த்த படுவது முகம் திறந்திருந்தால் மட்டுமே .மூடிய முகம் தாழ்த்தப்பட்டால் என்ன நிமிர்த்தப்பட்டால் என்ன மூடிய முகத்துக்கு இந்த சட்டம் இறக்கவில்லை இந்த சட்டத்தில் இருந்து முகத்தை மூட வேண்டும் என்று சொல்லும் மௌலவி மார்களின்  கண்டு பிடிப்பு ஆகும்

நபியவர்களுக்கு பாடம் எடுக்க முட்படுகிறார்கள் .

மற்றும் பெண்களின் முகத்தை மூடி விட்டு அவர்களுக்கு முழுமையான பார்வை  சுதந்திரத்தை உங்களை அறியாமலே  அமைத்து கொடுத்து விடுகிறீர்கள், முகம் திறந்து இருந்தால் மட்டுமே பார்வை தாழ்த்தப்படும் மூடிய முகத்துக்குள் இருந்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் பார்க்கலாம். அவர்கள் பார்ப்பதை வெளியில் இருக்கும் ஆண்களால் பார்க்கமுடியாது எனவெ முகம் மூடியவர்கள் முகம் மூடத்தவர்களை விட பார்வை  சுவாந்திரம்  பெற்றவர்கள்

எனவெ என்னை பொறுத்தவரை முகம் மூடியவர்களை விட முகம் மூடாமல் பார்வையை தாழ்த்திய பெண்கள் மிக சிறந்தவர்கள் அவர்கள் .

இன்னும் சொல்லப்போனால் உதாரணத்துக்கு இந்தியாவில் அரசியல் வாதிகள் மட்டும் நடிகர்கள் (எம்ஜிய்யர் கருணாநிதி போன்ற )  பொதுமக்களை மேடையில் சந்திக்கும் பொழுது இரவிலும் பகலிலும் கருப்பு கண்ணாடி அணிந்த வண்ணம் வருகை தந்திருப்பார்கள் இது வெய்யில் காரணமாக அணிந்திருக்கு என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனான் இவர்கள் அணிவது ஏன் என்றல் அவர்களுடைய பார்வை   யாரை பார்ப்பது என்று மக்கள் கண்டுகொள்ளக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் கறுப்புக் கண்ணாடி அணிவார்கள்.

இதிலிருந்து என்ன தெரிய வருகிறது முகத்தின் திரையுக்கு பின்னால் இருந்து எதை வேண்டுமானாலும் சுயந்திரமாக பார்க்க முழு சுயந்திரத்தை நாம் அமைத்து கொடுக்கிறோம்  இந்த பித் அத் ஆன செயல் இன்று பல நவீன பித்தனாக்களுக்கு ஒரு முக்கியமான காரணமாகி விட்டது

முகத்திரையுடன்  பெண்கள் தனிமையில் தெருவில் நடந்து போகும் பொது  ஆண்கள் பார்வை பட்டாலும் படாவிட்டாலும் முக திரை அணிந்திருக்கும் பெண்ணின் பறவை முற்றிலும் சுதந்திரம் பெற்றது இதனை மறுக்க முடியாது

இன்னும் சொல்லப்போனால் ஹஜ் உம்ரா செய்யும் பொது பெண்கள் ஏன் முகம் மூடுவது கிடையாது ? ஏன்  ஹஜ் உம்ரா சட்டத்தில் சட்டம் ஆக படவில்லை ஆண்களும் பெண்களும் மக்கள் நெருக்கடியில் இருக்கும் இக்கட்டத்தில் நபியவர்கள் ஏன் சட்டம் பிறப்பிக்க வில்லை ?

இன்று முகத்திரை தவறு செய்யும் பெண்களுக்கு ஒரு நல்ல உடையாக அமைத்துள்ளது. அதேநேரம் கண்ணியமான பெண்களும் கணவர்களுடைய வேண்டுகோளை  தட்டாமல் வேறு வழியின்று அணிந்துகொண்டு ஒழுக்கமாக வாழ்பவர்களும்  இருக்கிறார்கள்.

இது தனிப்பட்ட விருப்பத்துடன் செய்வது தவறல்ல.ஆனால் சட்டமாக கட்டாயம் செய்யப்ப பட வேண்டுமென்று சொல்வது தான் தவறு .