மார்க்க உரை

தலைப்பு - பெண்களே உங்களைத்தான்
உரை: மௌலவி பசால் (ஸலபி)

இன்று எம்மத்தியில் உள்ள பெண்களுக்கு அல்லாஹ் எவ்வகையான அந்தஸ்தை தந்திருக்கின்றான், இந்த இஸ்லாமிய மார்க்கம் எம்மை எந்த இடத்தில் வைத்திருக்கின்றது என்ற பல தகவல்கள் எம்மில் பலருக்கு அறியாமல் இருக்கின்றது. அவற்றை அறிய வேண்டுமா இந்த உரையை பாருங்கள்.. மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (Alquran 33:35)