Answered by Ansar Thablighi
வினா :

(6 நோன்பு) ஸவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை தொடராகத்தான்
பிடிக்க வேண்டுமா?

விடை :

தொடராகப் பிடிக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் கிடையாது. அதனால் ஸவ்வால் மாதத்திற்குள்
பிடித்தால் போதுமானது.
நபி (ஸல்) கூறினார்கள்

، عَنْ ثَوْبَانَ ، عَنِ النَّبِيِّ قَالَ : ' مَنْ صَامَ رَمَضَانَ فَشَهْرٌ بِعَشَرَةِ أَشْهُرٍ، وَصِيَامُ سِتَّةِ أَيَّامٍ بَعْدَ الْفِطْرِ فَذَلِكَ تَمَامُ صِيَامِ السَّنَةِ '




யார் ரமழானில் நோன்பு நோற்றாரோ ஒருமாதமும் பத்து மாதத்திற்கும் (சமமானதாகும்)
நோன்பு பெருநாளின் பின் ஆறு நோன்பும் ஓர் வருட நோன்பின் பூர்த்தியாகும்.
( அஹ்மத்)

இது ஆதாரமான அறிவிப்பாகும் . இதில் ரமழானைத் தொடர்ந்து தொடராக பிடிக்க வேண்டும் என
சுட்டிக் காட்டப்படவில்லை. இதனால் அந்த ஆறையும் ரமழானின் பின் ஸவ்வால் மாதம்
முடிவடைவதற்குள் பிடிக்கலாம்.

இதே வேளை

عَنْ أَبِي أَيُّوبَ ، قَالَ : قَالَ النَّبِيُّ : ' مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ '  

''யார் ரமழானில் நோன்பு நோற்று ஸவ்வாலின் ஆறைக் கொண்டு அதைத் தொயரவைத்தாரோ அவர்
வருடம் நோற்றவரைப் போன்றவராவார்'.

எனும் கருத்தில் எங்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள  அறிவிப்பு
பலஹீனமானதாகும்.