Answered by Ansar Thablighi
வினா

ஆட்சியாளர் தவிர்ந்த வேறு யாருக்கும் பைஅத் செய்யலாமா? அல்லது அமீராக்கிக்
கொள்ளலாமா?


விடை

அல்குர்ஆனிலோ அல்ஹதிஸிலோ ஆட்சியாளர் தவிர்ந்த வேறு எவருக்கும் பைஅத்
செய்வதற்கோ அல்லது அவரை அமீராக்கிக் கொள்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
அவ்வாறு வரக்கூடிய எந்த ஹதீதும் ஆதாரமானது அல்ல. மாறாக பலயீனமாதாகும்.
புகாரி கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஹதீதில் பின்வருமாறு வருகிறது.
பனூ இஸ்ராயீல்களை நபிமார்கள் வழிநடத்தி வந்தார்கள் . ஒரு நபி இறந்துவிட்டால்
அவரைத் தொடர்ந்த இன்னொரு நபி வருவார். எனக்கு பின் எந்தவெரரு நபியும் இல்லை.
என்றாலும் குலபாக்கள் (ஆட்சியாளர்கள்) வருவார்கள். அதிகம் வருவார்கள்.
முதலாமானவராக வருபவருக்கு பைஅத்தை நிறைவு செய்யுங்கள். பின்னர் அவரைத்
தொடரந்து வருபவருக்கும் (அவரின் பின் பைஅத் செய்யுங்கள்).
இவ்வாறு ஆட்சியாளராக வருபவருக்கே நபிமார்களுக்குப் பின் பைஅத் செய்யுமாறு
நபிகளாரின் கட்டளை வந்துள்ளது.
எனவே இஸ்லாமிய ஆட்சியாளருக்கு இல்லாமல் வேறு எவருக்கும் பைஅத் செய்வதும்  
அல்லது அவர்களை அமீராக ஏற்படுத்திக் கொள்வதும் ஓர் பித்அத்தான காரியமும்
வழிகேடுமாகும்.
எனவே இக்காலத்தில் யார் தனது இயக்கத்தின் தலைவருக்கு பைஅத் செய்தாலும்
அல்லது அவரை கட்டுப்படும் அமீராக ஏற்படுத்திக் கொண்டாலும் அது பிரிவினையாக
அடையாளப்படுத்தப்படுவதுடன் வழிகேடாகவும் ஆகிவிடும்.
இது தொடர்பான விரிவான விடயங்களைத் தெரிந்துகொள்ள பைஅத் ஓர் ஆய்வு எனும்
தலைப்பில் உள்ள எனது உரையை செவியுறவும்.