Answered by Ansar Thablighi
|
வினா:
பெருநாள் வாழ்த்து நன்மையான காரியமா?
விடை:
ஓர் விடயம் நன்மையான காரியமாக இருப்பதாயின் நன்மைகளுக்கு சொந்தமான
அல்லாஹ் அல்லது அவனுடைய தூதர் அதை சொல்லி இருக்க வேண்டும்.
பெருநாள் தினங்களில் ஒருவரை ஒருவர் ஏதேனும் சில வார்த்தைகளைக் கொண்டு
வாழ்த்துவதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக எந்த ஆதாரமான
ஹதீஸ்களும் கிடையாது.
அல்லது நபித்தோழர்களில் தங்களுக்குள் வாழ்த்துகள்
சொல்லுபவர்கள் என்ற செய்தியையும் ஆதாரமான அறிவிப்புகளில் காணவில்லை.
என்றாலும் சிலர் பெருநாள்களில் மற்றவரை 'தகப்பளல்லாஹுமின்னா வமின்கும்'
என்ற வார்த்தையாலும் சிலர்'' ஈத் முபாரக்' என்ற வார்த்தையாலும்
வாழ்த்துகின்றதை காண்கின்றோம் .
இவ்வாறு வாழ்த்துவது சுன்னத்தான காரியம் என்று சிலர் இதனை கூறுகிறார்கள்.
அவர்களின் இந்த எண்ணம் தவறானதாகும். அந்த எண்ணத்தில் வாழ்த்தினால் அது
பித்அத்தாக மாறிவிடும்.
எனவே பெருநாளாயினும் ஒருவர் ஒருவரை சந்தித்தால் ஏனைய நாட்களைப் போன்று
ஸலாம் கூறுவதே சுன்னாவாகும் . விசேடமாக எதுவும் கிடையாது.