Answered by Ansar Thablighi
|
வினா:
ஸதகதுல் பித்ரை பணமாகக் கொடுக்கலாமா?
விடை:
நபி (ஸல் ) அவர்கள் காலத்தில் பணமிருந்தது. ஆனாலும் பணத்தைக்
கொடுக்குமாறு கட்டளை இடவில்லை.
மாறாக பொருள்களாகவே கொடுக்கப்பட்டது. பொருள்களை வழங்குமாறே நபி (ஸல்)
அவர்களும் கட்டளையிட்டார்கள்.
அதற்கிணங்க ஸஹாபாக்கள் ஈச்சம்பழம் ,கோதுமை போன்று அவர்களால் உணவாக
நடைமுறையில் உட்கொள்ளப்பட்ட பல பொருள்களை வழங்கி வந்தார்கள்.
இவைகளை பணப்பெறுமதிக்கேற்ப மதிப்பிட்டால் ஒவ்வொரு பொருளும் வௌ;வேறு
பெறுமானம் உடையதாக இருக்கும்.
எனவே இன்ன பெறுமானமானத்திற்கு உட்பட்டதாக இருக்கட்டும் என நாம்
பெறுமதியிடாமல் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி பொருள்களாவே
பெறத்தகுதியானவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.