அலையலையாய் தனிமனித வழிபாட்டை விட்டு குர்ஆன் சுன்னாவை நோக்கி TNTJயினர் - எம்.எஸ்.சல்மான் பாரிஸ் (முன்னாள் ததஜ வின் கோவை மாவட்ட பேச்சாளர்)

முஸ்லிம்கள் அனைவரும் முஷ்ரிக் - வழிகெட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தவிர?

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! இன்றைய நவீன உலகில் மிகப்பெரிய கொள்கை குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால் சூனியம் என்ற விஷயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சொல்லும் கருத்து தான். அந்த கருத்தை சொல்லி மக்கள் அனைவரையும் பிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

அப்படி என்ன கருத்தை சொல்லிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

சூனியத்தால் தாக்கம் உண்டு என்று குர்ஆன் கூறியதையும் ஹதீஸ் கூறியதையும் ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணைவைத்துவிட்டான். அவன் முஷ்ரிக் என்று பட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், இந்த வழிகெட்ட கூட்டத்தினர்.

இதனால் பாதிப்பு ஏற்படுமா? ஏற்படாதா? என்ற தலைப்பிற்கு இப்போது செல்ல வேண்டாம். ஆனால் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பும் வேலையில் இந்த வழிகெட்டக் கூட்டத்தினர் மட்டும் இது போன்று நம்பக்கூடியவர்களை முஷ்ரிக் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள்தான் சத்தியத்தில் இருக்கிறோம் என்றும் மக்களைக் குழப்பிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த சூனிய விஷயத்தில் பெரிய ஆய்வு செய்து யோசிக்க வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் யார் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சுருக்கமாக நமக்கு விளக்கியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல் அவர்கள் கூறினார்கள்,

“என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) தம்மிடம் வரும்வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா(ரலி) நூல் : புகாரீ 3640

இந்த ஒரு செய்தி யார் சத்தியத்தில் இருக்கிறாரகள் என்று தெளிவாக விளக்குகிறது.

இந்த வழிகெட்ட கூட்டத்தினர் சொல்கிறபடி இவர்கள் தான் சத்தியப்பாதையில் இருக்கிறார்கள் என்றால் அதே சத்தியப் பாதையில் தான் அனைவரும் இருந்திருக்க வேண்டும். இனியும் அப்படிதான் இருக்க வேண்டும்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் அவன் முஷ்ரிக். இவர்கள் சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது. எனவே நாங்கள் முஷ்ரிக் இல்லை என்று கூறுகிறார்கள்.

இப்போது இந்த ஹதீஸை வைத்து யார் சத்திய பாதையில் உள்ளார்கள் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

இவர்கள் சொல்வது தான் சத்தியம் என்றால் இந்த சத்தியத்தில் இப்போது இவர்கள் நிலைத்திருக்கிறார்கள் என்றால் இதற்கு முன் யார் இந்த சத்தியத்தில் இருந்தது. அதுவும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்க வேண்டும் என்று தான் ஹதீஸ் கூறுகிறது. இவர்கள் சத்தியத்தின் பக்கம் வந்து அதாவது ஏகத்துவத்தில் இணைந்து 2 வருடங்கள் தான் ஆகிறது.

ஆனால் மேடைகள் தோரும் 30 வருடங்களாக தவ்ஹீத்வாதியாக இருக்கிறோம் என்று பொய் சொல்கின்றனர். ஏனெனில் கப்ருகளுக்கு சென்று இறந்தவரிடம் பிராத்திக்கக் கூடாது என்றும் அது இணைவைப்பும் என்றும் அதில் நாங்கள் மீண்டு வந்தது தான் 30 வருடம் என்று சொல்லிவருகின்றனர். அதற்கு முன்பு வரைக்கும் அவர்கள் இணைகற்பித்ததாகவும் கூறுகின்றனர்.

அப்படியானால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் முஷ்ரிக்குகள் என்று இந்த இரு வருடங்களாகத்தான் சொல்லி வருகின்றனர்.

எனவே இவர்கள் அதற்கு முன் இணைவைத்துக்கொண்டிருந்ததை ஒத்துக்கொள்கின்றனர். எனவே இனி மேடைகளில் நாங்கள் தவ்ஹீத்திற்கு வந்து 30 வருடம் என்று சொல்லக்கூடாது. 2வருடமாக தான் எங்களுக்கு தவ்ஹீத் கிடைத்தது என்று சொல்ல வேண்டும்.

எனவே இந்த 2 வருடங்களுக்கு முன் யார் இவர்கள் சொல்லக்கூடிய சத்தியப் பாதையில் இருந்தது? அவர்களுக்கு முன் யார் சத்தியப் பாதையில் இருந்தது? அவர்களுக்கு முன் யார் இந்த சத்தியப்பாதையில் இருந்தது? இப்படி சொல்லிக்கொண்டே சென்றால் கடைசியாக நபி(ஸல்) அவர்களிடம் சென்று முடியும்.

சரி நபி(ஸல்) அவர்களாவது சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் முஷ்ரிக் என்று கூறினார்களா? ஏன் அவர்கள் சொல்லவில்லை?

நபி(ஸல்) அவர்களுக்கு தானே குர்ஆன் அருளப்பட்டது.

இந்த 2:102 வசனத்தின் விளக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவில்லையா?

மார்க்கத்தை அல்லாஹ் விளக்காமல் போய்விட்டானா? 1400 ஆண்டுகளாக யாரும் இதை விளக்கவில்லையா?

தற்போது தவ்ஹீத் ஜமாத்தின் பீ.ஜே விற்கு தனியாக அல்லாஹ் விளக்கிக் கொடுக்கிறானா?

ஆகவே நபியின் அந்தஸ்தில் பீ.ஜே வை வைத்துள்ளீர்கள். பீ.ஜே இரண்டு வருடங்களாக தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது என்று அதை நம்பினால் முஷ்ரிக் என்று சொல்கிறார்.

அப்படி ஒவ்வொரு சமுதாயத்திலும் சத்தியக்கொள்கையில் இருந்திருந்தால் நமக்கு தெரியாமல் இருக்காது. வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும். எனவே இந்த ஒரு ஹதீஸ் இவர்கள் வழிகெட்ட கூட்டத்தினர் என்பது உறுதி செய்கிறது.

அது மட்டுமில்லாமல் சூனியத்தை பதிவு செய்த புகாரீ, முஸ்லிம் இன்னும் இது போன்ற ஏனைய இமாம்களின் நிலையை ஏன் இவர்கள் குறிப்பிடுவதில்லை? அவர்கள் தகவலுக்காக தான் சூனியம் சம்பந்தமான செய்தியைப் பதிவு செய்தார்களா? அந்த அளவிற்கு மார்க்க ஞானம் இல்லாதவர்களா? பீ.ஜே விற்கு மட்டும் தான் ஞானம் உள்ளதா?

அப்துல் கலாமைப் பற்றி கூறும் போது ஒவ்வொரு முஸ்லிமின் வெளிப்புறத்தை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் முஷ்ரிக் என்றும் சொல்லிய நீங்கள் ஏன் சூனியத்தைப் பதிவு செய்த இமாம்களை முஷ்ரிக் என்று கூறவில்லை.

இங்கு இவர்களின் நயவஞ்சகத்தன்மை தெளிவாக தெரிகிறது. புகாரீ இமாமையோ அல்லது முஸ்லிம் இமாமையோ அல்லது வேறு யாரை சொன்னாலும் அவரகள் பதிவு செய்த ஹதீஸை எடுத்துக்கொள்ள முடியாது. இறுதியில் இவர்களின் நிலை குர்ஆன் மட்டும் போதும் என்ற நிலை தான் ஏற்படும். அதனால் தான் அவர்களை சொல்ல மறுக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்தியத்தில் இருப்பது யாரென்றால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று குர்ஆன் ஹதீஸில் உள்ளதை நம்பிய மக்கள் தான். 2 வருடமாக சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் அவர்கள் முஷ்ரிக் என்று சொல்பவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

இதை நாம் பதிவு செய்தவுடன் அண்ணனின் தம்பிகள் சுய அறிவைக்கொண்டு சிந்திக்காமல் மார்க்க ரீதியாக நம்மை விமர்சிக்காமல் திட்டுவதிலேயே காலத்தை கழித்து அண்ணனின் காலடியில் விழுந்துகிடக்கின்றனர்.

அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தயைக் கொடுப்பானாக!

இப்படிக்கு

எம்.எஸ்.சல்மான் பாரிஸ்

(முன்னால் ததஜ வின் கோவை மாவட்ட பேச்சாளர்)