உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய் உரைத்தார்களா? - பாகம் - 02 - மௌலவியா பர்வின் ஷரஈயா 

**உஸ்தாத் ரயீஸ்டீன் அவர்களால் மறைக்கப்பட்ட இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்களின் கருத்து**

ஒரு ஹதீஸிலிருந்து சட்டங்கள் எடுப்பதானால் அது சம்பந்தமான எல்லா ஹதீஸையும் பார்க்க வேண்டும். ஆனால் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் பத்ஹுல்பாரி’யை கூட வாசிக்கவில்லை என்ற தோரணையில் கூறும் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள் தனது உஸ்தாதை ‘பொய்யர்’ என்று நிரூபிப்பதற்கு சில கிரந்தங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள்.
அவர் ஆய்வு செய்த கிரந்தங்களில் ஒன்றான ஸாதுல் மஆத்’இலிருந்து தான் குறிக்கப்பட்ட இப்னுல் கய்யிம்(ரஹ்) கருத்தை எடுத்து உங்களுக்காக நான் பதிவு செய்திருந்தேன்.ஆனால் அதைப்பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

இன்னும், தெளிவாக சொல்லப்போனால்; டாக்டர் அவர்கள் மாதத்தை பற்றி குறிப்பிடும் போது அரபிகளின் வழமை எவ்வாறிருக்க வேண்டும் என்பதில் இப்னுல் கய்யிம்(ரஹ்) கூறும் ஒரு தகவலை எடுத்து வைக்கிறார்.
அந்த தகவல் சொல்லப்பட்ட அதே பக்கத்தில் தான் இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) பின்வருமாறும் கூறுகிறார்கள்.
زاد المعاد في هدي خير العباد (2/ 100)
فَإِنَّ الْبَاقِيَ كَانَ خَمْسَةَ أَيَّامٍ بِلَا شَكٍّ بِيَوْمِ الْخُرُوجِ

**இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கருத்து சர்வதேச பிறைக்கு எதிரானதா?***

ஹதீஸ் கலை அறிஞர்களிற்கு தெரியாத; பகுத்தறிவு ஏற்காத ஹதீஸ்களின் நுழைவுகளை கண்டதால்தான் ‘ஹதீஸ்களின் பெயரால் நம்மவர்களின் பொய்கள்’ என தனது உரைக்கு தலைப்பிட்டதாக டாக்டர் அவர்கள் கூறுகின்றார்கள்.

ஹதீஸின் நேரடி விளக்கத்தை பொய் என சித்தரித்து காட்டும் டாக்டர் அவர்கள் அவரது கருத்திற்கு சான்றாக முன்வைப்பது பிரயாணம் செய்த நாட்களின் எண்ணிக்கைக்கு தீர்வாக இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கத்தை ஆகும். அதாவது இமாம் அவர்கள் கூறுகிறார்கள். 

البداية والنهاية ط إحياء التراث (5/ 277)

وَلَا يُمْكِنُ الْجَوَابُ عَنْهُ إِلَّا بِمَسْلَكٍ وَاحِدٍ وَهُوَ اخْتِلَافُ الْمَطَالِعِ بِأَنْ يَكُونَ أَهْلُ مَكَّةَ رَأَوْا هِلَالَ ذِي الْحِجَّةِ لَيْلَةَ الْخَمِيسِ، وَأَمَّا أَهْلُ الْمَدِينَةِ فَلَمْ يَرَوْهُ إِلَّا لَيْلَةَ الْجُمُعَةِ وَيُؤَيِّدُ هَذَا قَوْلُ عَائِشَةَ وَغَيْرِهَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ - يَعْنِي من المدينة - إلى حجة الوداع 

வெளியிறங்கிய நாளையும் சேர்த்து )பார்க்கும் போது) சந்தேகமில்லாமல் எஞ்சியுள்ள நாட்கள் (5) நாட்களாகவே இருக்கிறது. 

(ஸாஅதுல் மஆத் , பாகம் :2 பக்கம் :100 )

இங்கே டாக்டர் அவர்கள் தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கிரந்தத்தை அதிலும் குறிப்பாக அவர் வாசித்த அதே பக்கத்தில் இருக்கும் இமாம் இப்னு கய்யிம்(ரஹ்) அவர்களின் இந்த கருத்தை ஏன் மறைக்க வேண்டும்?

உண்மையில் உங்கள் ஆய்வில் நீதமுள்ளவராக நீங்கள் இருந்திருந்தால் மாபெரும் இரண்டு இமாம்களினதும் விளக்கத்தை சொல்லி விட்டு, அதன் பின்னர் பிரயாணத்தில் மதீனா வாசிகள் தரித்திருந்த நாட்கள் பற்றிய இந்த சிக்கலுக்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்களின் விளக்கத்தையே நன் சரி காண்கிறேன் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்.

அப்படி சொல்லாவிடினும் பரவாயில்லை. இந்த வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காணவே முடியாது என்று எல்லா அறிஞர்களும் ஒரே கருத்தை கூறியது போல் ஆணித்தரமாக மக்களுக்கு சொன்னீர்களே! கரணம் என்ன......?

அந்த கிதாபின் அதே பக்கத்தில் உள்ள அந்த விடயத்தை நீங்கள் வாசிக்கவில்லையா? அல்லது வேண்டுமென்றே மறைத்தீர்களா?

ஹதீஸின் நேரடி விளக்கத்தை அறிஞர்கள் சொன்ன பாணியில் விளக்கிச் சொன்ன உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய் கூறுவதாக வார்த்தைக்கு வார்த்தை அவதூறு கூறும் நீங்கள் வேறு கிரந்தங்களை பார்த்திராவிடினும் பரவாயில்லை. அந்தப்பொய்யை நிரூபிப்பதற்காக நீங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட அந்தக்கிரந்தங்களையாவது முழுமையாக வாசித்து அதில் உள்ளதை மறைக்காமல் ஆய்வில் நீதமாக நடந்திருக்க வேண்டும் அல்லவா?

**இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கருத்து சர்வதேச பிறைக்கு எதிரானதா?***

ஹதீஸ் கலை அறிஞர்களிற்கு தெரியாத; பகுத்தறிவு ஏற்காத ஹதீஸ்களின் நுழைவுகளை கண்டதால்தான் ‘ஹதீஸ்களின் பெயரால் நம்மவர்களின் பொய்கள்’ என தனது உரைக்கு தலைப்பிட்டதாக டாக்டர் அவர்கள் கூறுகின்றார்கள்.

ஹதீஸின் நேரடி விளக்கத்தை பொய் என சித்தரித்து காட்டும் டாக்டர் அவர்கள் அவரது கருத்திற்கு சான்றாக முன்வைப்பது பிரயாணம் செய்த நாட்களின் எண்ணிக்கைக்கு தீர்வாக இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கத்தை ஆகும். அதாவது இமாம் அவர்கள் கூறுகிறார்கள்.

البداية والنهاية ط إحياء التراث (5/ 277)

وَلَا يُمْكِنُ الْجَوَابُ عَنْهُ إِلَّا بِمَسْلَكٍ وَاحِدٍ وَهُوَ اخْتِلَافُ الْمَطَالِعِ بِأَنْ يَكُونَ أَهْلُ مَكَّةَ رَأَوْا هِلَالَ ذِي الْحِجَّةِ لَيْلَةَ الْخَمِيسِ، وَأَمَّا أَهْلُ الْمَدِينَةِ فَلَمْ يَرَوْهُ إِلَّا لَيْلَةَ الْجُمُعَةِ وَيُؤَيِّدُ هَذَا قَوْلُ عَائِشَةَ وَغَيْرِهَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّم لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ - يَعْنِي من المدينة - إلى حجة الوداع  

(இந்த பிரச்சினைக்கு) ஒரு பாதையால் தான் தீர்வு சொல்ல முடியும். அது சந்திர உதயத்தின் வித்தியாசமாகும் அதாவது மக்கா வாசிகள் வியாழனின் இரவிலும் (புதன் மாலை) மதீனா வாசிகள் வெள்ளி மாலையிலும் (வியாழன் மாலை) பிறையை கண்டிருக்க வேண்டும்.

நான் விரிவஞ்சி இமாம் அவர்களின் முழு வார்த்தையையும் மொழி பெயர்க்கவில்லை. டாக்டர் அவர்கள் தெளிவாகவே மொழி பெயர்க்கிறார்கள். தேவைப் படுவோர் (அவரது உரையை பார்த்துக் கொள்ளவும் )

எனவே பகுத்தறிவு உள்ளவர்களே! இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கூற்றை சற்று உற்று நோக்குங்கள். 

இதில் எங்காவது ‘பாதையில் நபி (ஸல்) அவர்கள் பிறை கண்டார்கள்’ என்ற ஹதீஸின் நேரடி விளக்கத்தை இமாம் இப்னு கதீர் மறுக்கிறார்களா? 

அல்லது (மதீனாவில் இருந்து வெளியேறி மக்காவிற்குள் நுழையும் முன் பாதையில்) அவர்கள் பிறை கண்டார்கள் என்று கூறுகின்றாரா?

துல் ஹஜ்ஜின் 9வது பிறை வெள்ளி கிழமை என்பதால் முன் சென்ற வாரத்தில் உள்ள வியாழக்கிழமை துல் ஹஜ்ஜின் முதல் பிறை.. மக்கா வாசிகளும் மதீனா வாசிகளும் ஒரே பிறையில் தான் அரபாவில் தரித்திருக்க வேண்டும்.

ஒரு வாதத்திற்கு இப்னு கதீர் (ரஹ்) சொல்வது போன்று மக்கா வாசிகள் வியாழனிலும் மதீனா வாசிகள் வெள்ளியிலும் முதல் நாளை துவங்கி இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

மதீனாவிற்கு வந்த இறை தூதர் ஏன் தான் கண்ட பிறையை வைத்து ஹஜ் செய்யவில்லை? ஹஜ்செய்ய மக்கா வாசிகளின் தகவல்களை ஏன் சான்றாக எடுத்தார்கள்.? மாறாக குறிக்கப்பட்ட நாளில் “நாங்கள் இருந்த பிரதேசத்தில் நாங்கள் பிறையை காணவில்லை எங்களுடைய மாதம் 30 தான்” என கூறியிருக்க வேண்டுமல்லவா? 

ஆனால் எல்லோரும் ஒரே நாளில் தானே அரபாவில் தரிக்கிறார்கள். ஆக; சர்வதேச பிறைக்கு எதிரான கருத்தையா இமாம் அவர்கள் கூறுகின்றார்கள். சற்று சிந்தியுங்கள்! 

டாக்டர் ரயீசுத்தீன் அவர்கள் இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கூற்றை முக்கியமாக எடுத்து வாதாடியதனால் தான் நான் இந்தளவு விளக்கம் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால், இவை எல்லாமே இடம்பாடாக வரலாம் என்ற கருத்தின் பின்னணியில் வரக்கூடிய வாதங்களே தவிர இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் இந்த கருத்தை விட இமாம் இப்னு கய்யூம் (ரஹ்) அவர்களின் கருத்தே நான் சரி காணும் ஓன்று என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன் ..(தேவைப் படின் மீட்டி பார்த்துக் கொள்ளவும்) 

இது தவிர இறை தூதர் அவர்கள் இடையிலே பிறை கண்டார்கள் என்பதை இரண்டாம் கருத்திற்கு இடம் இன்றி குறிக்கப்பட்ட ஹதீஸில் இருந்து நேரடியாக நாங்கள் விளங்குகின்றோம் அதுவே சர்வேதேச பிறைக்கு போதிய சான்றாகும்.

ஆக; இதுவரை நான் உங்களுக்கு தந்த தரவுகள் மற்றும் ஆய்வுத் தொகுப்பின் படி :-

முதலாவதாக: எமது உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய் கூற வில்லை; வேண்டுமென்று பொய் கூறவே மாட்டார். 

(தப்பதஹுல்லாஹ் அலய்ஹி) மாறாக ஹதீஸின் நேரடி விளக்கத்தையே சொன்னார்.

இரண்டாவதாக: அவர் சொன்ன விளக்கத்தையே ஹாபிள் இப்னு ஹஜர் (ரஹ்) உட்பட சஹீஹுள் புஹாரியின் விரிவுரையாளர்கள் இமாம் அய்னி மற்றும் இப்னு பத்தாலும் கூறுகிறார்கள்.

மூன்றவதாக :சொந்த வாழ்வில் சிறிய தொரு பொய் சொல்வதை கடுமையாக வெறுக்கும் மனிதர் இறை தூதர் மீது பொய் கூறுகிறார் என்று டாக்டர் ரயீசுடீன் சரயீ அவர்கள் கூறியது மிகப்பெரும் அவதூறு ஆகும்.

நான்காவதாக: குறிக்கபட்ட ஹதீஸில் இருந்து விளங்கும் நேரடி விளக்கத்திற்கும் டாக்டர் அவர்கள் முன்வைக்கும் நாட்களின் எண்ணிக்கை பற்றிய சிக்கல்களிற்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை.

ஐந்தாவதாக: டாக்டர் அவர்கள் இது சம்பந்தமாக ஆய்விற்கு எடுத்த கிரந்தங்களில் இருந்து நீதமான ஆய்வை அவர் தரவே இல்லை. மாறாக தன் கருத்தை வலுப்படுத்த சிலதை மறைத்துள்ளார்.

இது போன்ற இன்னும் சில விடயங்களில் பூரணமான தெளிவை பெற்றிருப்பீர்கள்.......

**பிறை இஜ்திஹாதிற்கு அப்பாற்பட்டதா?***

குறிக்கப்பட்ட ஹதீஸ் தொடர்பாக உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் மீது கூறப்பட்ட அவதூறுக்கு பதிலளிப்பது தான் எனது ஆக்கத்தின் நோக்கமாக இருந்தாலும் இறுதியாக ஒரு விடயத்தை சொல்லி கொள்கிறேன்......

பிறை என்பது இஜ்திஹாதுக்குரிய விடயமாகும். ஒருவர் சர்வேதேசப்பிறையையோ அல்லது பிரதேசத்துக்கு பிரதேசம் காணும் பிறையையோ அல்லது கணக்கீட்டு பிறையையோ இதில் எந்த வகையாக இருந்தாலும் ஏதாவது ஒன்றை அவரது ஆய்வின் மூலம் சரி கண்டு நடைமுறைபடுத்துகிறார் எனில் அல்லாஹ் அவருக்கு கூலி வழங்குவான். அவருடைய ஆய்வு சரியாக இருந்தாலும் பிழையாக இருந்தாலும் சரியே.. .உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஒரு நாளும் சர்வதேச பிறை தவிர்ந்த மற்ற யாவும் வழிகேடு என்று கூறியதே இல்லை. மாறாக சர்வேதேச பிறையை அவர் நபி வழியாக காண்பதால் அதை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். மேலும் அது சம்பந்தமான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளிற்கும் பதிலளித்து அவரின் பிறை நிலைப்பாட்டை மக்கள் மன்றதில் ஆதாரத்தோடு முன் வைக்கின்றார்.

பொதுவாக ஆய்வுக்குரிய ஒரு விடயத்தில் பல கருத்துக்களை பலரும் சொல்லும் போது அதில் ஒன்றை சரி காணும் நேர்த்தியான ஒரு ஆய்வாளர் அதற்கு எதிரான கருத்துகளை ஒரு போதும் அவரது ஆய்வில் சரி காண மாட்டார். மாறாக அவைகளிற்கு ஆதாரங்களோடு மறுப்பளிப்பார். தூய்மையான ஆய்வு செய்து கருத்தை வெளியிட்ட முன் சென்ற மற்றும் தற்கால உலமாக்களின் கிரந்தங்களில் இருந்து இத்தைகைய ஒரு நடைமுறையையே நாம் காண்கிறோம்.

ஆனால் டாக்டர் உஸ்தாத் ரய்சுத்தீன் ஷரஈ அவர்களிற்கும் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களிற்கும் பிரச்சினை பிறையில் இல்லை. மாறாக இஜ்திஹாதிற்கு அப்பாற்பட்ட குர்ஆன் சுன்னாஹ் பேசும் எல்லோரும் ஏகோபித்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களில் ஒன்றான தஃவாவின் அணுகு முறையில் தான் உஸ்தாத் அன்சார் தப்லீகி டாக்டர் அவர்களை குறை காண்கிறார் ... ஆக மன்ஹஜில்(தஃவா அணுகுமுறை) இல் டாக்டர் சறுகி விட்டதாக கூறும் உஸ்தாத் அன்சார் தப்லீகி அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கின்றார்.

எனவே , “நான் சலபுகளின் வழிமுறையை விட்டு வழி தவறவில்லை நான் தலைவராக இருக்கும் ராபிதா எனும் அமைப்பு சரியான வழியில் தான் இருக்கிறது.” என உஸ்தாத் ரயீசுடீன் அவர்கள் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டுமே தவிர இஜ்திஹாதிற்குரிய விடயமான பிறையை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.

உஸ்தாத் ரயிசுதீன் அவர்களே! நீங்கள் பிறை விடயத்தில் உங்கள் உஸ்தாதின் கருத்திற்கு மாற்றமான ஒரு கருத்தில் இருக்கிறீர்கள் . என்பதற்காக நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். என்று உஸ்தாத் அன்சார் தப்லீகி இது வரைக்கும் சொல்லவே இல்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டார். மாறாக உங்களின் தஃவாவின் அணுகுமுறை சலபுகளின் மன்ஹஜுக்கு மாற்றமானது என்றே கூறுகின்றார்.

எனவே, பிறை சம்மந்தமாக திரும்ப திரும்ப பேசுவதை விட்டு விட்டு பித்அத் வாதிகளுடன் பழகுதல் உட்பட உங்களின் சில தஃவாவின் அணுகுமுறைகள் சலபுகளின் மன்ஹஜூக்கு உட்பட்டதா! என சற்று பாருங்கள்!

சஹாபாக்கள் மற்றும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றிய உலமாக்கள் குறிப்பாக இமாமு அஹ்லுல் சுன்னாஹ் இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்களில் இருந்து தற்காலம் வரை சத்தியத்தில் நிலைத்திருக்கும் உலமாக்களின் அணுகு முறையை சற்று வாசித்துப்பாருங்கள் .. இதையே நான் உங்களிடம் வினயமாக கேட்டு கொள்கிறேன். 

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழிகாட்ட போதுமானவன்......