கணவனுக்கு பகரமாக மனைவி வலீமா விருந்தளிக்கலாமா?

திருமணத்திற்காக வழங்கபடு;பம் விருந்தே வலீமா (வலீமதுல் உர்ஷ்)என்று சொல்லப்படுகிறது. திருமணமான பின் இவ்வாறான ஒரு விருந்தளிப்பது நபிகளாரால் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். எனவே ஒவ்வொருவரும் தனது வசதிக்கேற்றவாறு விருந்தை வழங்குவது திருமணத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்றாக இருக்கிறது.

திருமணத்திற்காக வழங்கப்படும் விருந்தே வலீமா (வலீமதுல் உர்ஷ்)என்று சொல்லப்படுகிறது. திருமணமான பின் இவ்வாறான ஒரு விருந்தளிப்பது நபிகளாரால் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். எனவே ஒவ்வொருவரும் தனது வசதிக்கேற்றவாறு விருந்தை வழங்குவது திருமணத்தில் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. தான் மணக்கப் போகும் பெண்ணுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வது ஆணின் கடமையாகும்.

இந்த அடிப்படையில் 'வலீமா' வும் கட்டாயம் ஆண் தரப்பினராலேயே வழங்கப்பட வேண்டும்.

நபியவர்கள் தன்னுடைய மனைவிமார்கள் அனைவருக்கும் தன் செலவிலேயே விருந்தளித்தார்கள். மேலும் ஸஹாபாக்களையும் அவ்வாறு செய்ய ஏவினார்கள். மனைவியின் செலவில் வலீமா கொடுக்கும் நடைமுறை நபிகளாரினதும் தோழர்களினதும் வாழ்வில் காணமுடியாத ஒன்றாகும்.

என்றாலும் மனைவி அவளது செலவில் வலீமா வழங்கலாம் என்பதற்கு சிலர் பின் வரும் ஹதீஸை ஆதாரம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து தவறாகும்.

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி)அவர்கள் கூறினார்கள்.

அபூ உசைத் அஸ் ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின் போது நபியவர்களையும் நபித்தோளர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத் (ரழி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரழி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால் )பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள். ஸஹீஹூல் புகாரி 5182

இந்த ஹதீஸில் 'உம்மு உஸைத் தனது செலவில் இருந்து விருந்தளித்தார்' என்று சொல்லும் எந்தவொரு வாசகமும் இடம்பெறவில்லை. மாறாக அவர் உணவை செய்து கொடுத்தார் என்றே இடம்பெறுகிறது.

அதற்கப்பால் இதே ஹதீஸ் புகாரியின் இன்னொரு இடத்தில் وَكَانَتِ امْرَأَتُهُ

يَوْمَئِذٍ خَادِمَهُمْ، وَهِيَ العَرُوسُ

'அந்த தினத்தில் அவருடைய மனைவி மணப் பெண்ணாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு பணிவிடை செய்யக்கூடியவளாக இருந்தாள்' என்ற வாசகத்துடன் இடம் பெறுகிறது.

எனவே 'மணப்பெண் வலீமாவிற்குரிய உணவு செய்யும் பணியில் ஈடுபடலாம்' என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகிறதே தவிர வலீமா அவளது செலவில் நடைபெறலாம் என்பதை 'இந்த ஹதீஸை வைத்;து பெண் வீட்டாரும் மணவிருந்தளிக்கலாம் என்று சொல்லுபவர்களின் விளக்கம் மிகவும் தவறானதாகும். அதற்குமப்பால் தற்போது பெண் வீட்டில் விருந்தளிப்பது மற்றும் திருமணத்தில் பெண் வீட்டினர் பல செலவுகளை செய்தல் போன்ற விடயங்கள் இன்று நம் சமுதாயத்தில் கட்டாய சடங்காக ஆக்கப்பட்டுள்ளது. அதை செய்யாதவர்கள் கேவலமாக கருதப்படும் நிலையையும் பரவலாகக் காண்கிறோம்.

எனவே, மக்களின் பிழையான செயற்பாட்டை வரவேற்பது போல் இந்த ஹதீஸிலிருந்து எடுக்கப்பட்ட இத்தவறான விளக்கத்தை பிரசுரிப்பதை தவிர்க்க வேண்டும். என்றாலும் ஒருவருக்கு அவரது வசதியற்ற நிலையை கருத்திற் கொண்டு அவர் தரப்பிலிருக்கும் இன்னொருவர் அல்லது அவருக்கு நெருக்கமான அவரின் நன்பர்கள் வேறு யாராவது வலீமாவிற்கு ஏற்பாடு செய்கிறார் எனில் இதுவும் நபிவழி வலீமாவில் அடங்கிவிடும். இது போன்ற நிகழ்வுகள் இறைத்தூதர் காலத்தில் இடம் பெற்றுள்ளது.

இதைவைத்து மனைவியின் சொத்தில் வலீமாக் கொடுக்க ஆதாரம் தேடுவது பொருத்தமான ஆரோக்கியமான விடயமல்ல. எப்போதும் எம் சமூகம் நபிவழியை உயிர்ப்பிக்க வழிகாட்டி அதற்காக முயற்சிப்போமாக.

ஆக்கம்:

பர்வீன் ஷரயிய்யா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிந்து அனுப்பவும்....