தூய்மைப்படுத்தப்படவேண்டிய தஃவாக் களம் - மௌலவிஅன்சார் தப்லீகி

அல்குர்ஆன் அல் ஹதீதை நபிவழியில் பிரச்சாரம் செய்து ஷிர்க் பித்அத் இல்லாத நபி வழி நடக்கும் சமூகத்தை உருவாக்க விரும்பும் மௌலவிமார்கள் தங்களையும் தங்கள் தஃவா வழிமுறைகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் வழிதவறிய இயக்கங்களுக்கு ஒத்தாசை கொடுக்கின்ற விதத்தில் வழிதவறிய இயக்கங்களின் மேடையில் ஏறி வழிதவறியவர்கள் எதிர்பார்க்கின்ற தலைப்புகளில் பேசுவது முற்றிலும் தவறானதாகும்.

அடிப்படைக் கொள்கையில் வழிதவறியவர்களுக்கு அவர்களின் கொள்கையில் உள்ள வழிகேடுகளை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு நேர்வழியை விளங்கப்படுத்துவதே அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களை எமனுக்கு தஃவாப்பணிக்காக அனுப்பிய வேளையில் முதலாவதாக தவ்ஹீதின் பக்கம் அழைக்குமாறே கட்டளையிட்டார்கள். அதை ஏற்றுக் கொண்டால் தொழுகையை கற்றுக்கொடுக்குமாறு கூறினார்கள்.

எனவே தவ்ஹீதை பேசுவதற்கு தடைவிதிக்கின்ற தப்லீக் ஜமாஅத் மற்றும் ஜமாஅத் இஸ்லாமி போன்ற கொள்கை கொண்டவர்களின்; மேடைகளில் ஏறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கே தவ்ஹீத் பற்றிய தெளிவை முன்வைக்கவே முயற்சிக்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக சில தெளஹீத் பேசும் மௌலவிமார்கள் வழிதவறியவர்கள் தருகின்ற காணிக்கைகளுக்காக அல்லது கௌரவங்களுக்காக அல்லது சில சுயநலன்களுக்காக அவர்கள் கூறுகின்ற தலைப்புகளில் பேசிவிட்டு அவர்களின் இயக்கங்களை வளர்ப்பதற்கு தாமும் ஒத்தாசை வழங்கியவர்களாக நடந்துகொள்வது வழிகேட்டை நிலைநாட்ட உதவிசெய்வதாகவே அமையும்

மரத்தின் ஆணிவேரை கடித்துப் பிடித்தேனும் சரி (வழிகேடான) அனைத்து பிரிவினர்களை விட்டும் ஒதுங்குமாறே நபி (ஸல்) எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.

ஒரு காலத்தில் இலங்கையின் பல ஊர்களிலும் குர்ஆன் சுன்னாவின் பிரச்சாரம் வழிகேடர்களுடன் சமரசம் வைக்காமல் தூய்மையான வடிவில் நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் மௌலவிமார்கள் மிகக் குறைவாக இருந்த போதும் அவர்கள் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.

அவ்வாறே அன்றிருந்த அறபிபடிக்காத கொள்கைவாதிகளும் கொள்கையில் மிக உறுதியாக இருந்த்தோடு அக்கொள்கையை பாதுகாக்க தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்து பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் பல்வேறுபட்ட போராட்டக் களங்கலளயும் எதிர்நோக்கினார்கள்.

அதனால் சொற்பமான மக்கள் இருந்தபோதும் கொள்கையில் தூய்மையை விரும்பியவர்களாகவே இருந்தார்கள்.

ஆனால் முன்னோர்களின் தியாகங்களின் பின்ன்னியில் உருவான இக்களங்களில் சமகாலத்தில் சம்பளத்துடன் பிரச்சாரம் செய்யவந்த பல மெளலவிமார்கள் தங்கள் சுயநலன்களுக்காக இக்களத்தை அசிங்கப்படுத்தும் வித்த்தில் பல காரியங்களில் இறங்கியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்

இவர்களுக்கு முன்வந்தவர்களின் பல போராட்டங்களின் காரணமாக உருவான தூய்மையான தஃவாக்களத்தின் பின்னால் உள்ள தியாகங்களை இவர்கள் அனுபவிக்காத்தும் ஒரு காரணமாகும்.

அதனால் இந்த மௌலவிமார்கள் தங்கள் சம்பளத்தையும் வாழ்வாதாரத்தையும் தேடும் களமாக இதனைப பயன்படுத்திக் கொள்வதும் மிகவும் கவலையான விடயமாகும்;.

மேலும் இவர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் தியாகங்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல் தங்கள் சுயநலன்களை தக்கவைத்துக் கொள்ள இவர்கள் செய்யும் பிழையான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முற்படுவது மிகவும் வியப்பிற்குரியதும் வருத்த்த்தை தருகின்ற விடயமுமாகும்..

இதே வேளை ஆரம்பத்தில் பல தியாகங்கள் செய்து பிரச்சாரப்பணியில் ஈடுபட்ட இன்னும் சிலர் சமகாலத்தில் தங்கள் கொள்கையையும் விட்டுக் கொடுத்து வருமானத்தையும் கௌரவத்தையும் தேடக்கூடியவர்களாக மாறிவருவது மிகவும் கவலையான விடயமாகும்.

எனவே வழிதவறியவர்களுடன் சமரசம் செய்யும் இந்த மௌலவிமார்களின் தீங்குகளை விட்டும் குர்ஆன் சுன்னாவின் தூய்மையான தஃவாக்களம் பாதுகாக்கப்படுவது மிகவும் அவசிமாகும்

அவ்வாறான மௌலவிமார்கள் இனங்காணப்படும் வேளையில் அவர்களின் முகஷ்துதிக்காக அவர்களை மேலும் உள்வாங்கி தூய்மையான பிரச்சாரப்பணியை களங்கப்படுத்தக் கூடாது .

அதற்கு மாற்றமாக இவர்களிடம் நல்லதொரு நிலமை வெளிச்சத்திற்கு வரும்வரை வழிதவறிவர்களை விட்டும் ஒதுங்குவதைப் போன்று இவர்களை விட்டும் நாம் ஒதுங்கியிருப்பதே பொருத்தமானகும்.;

மேலும் ஆரம்பகால இமாம்கள் இஸ்லாத்தின் தூய்மையை பாதுகாக்க கையாண்ட வழிமுறைகளையும் நாம் இங்கு கையாள வேண்டும்.

அதாவது எவர்களால் மார்க்கத்தின் தூய்மை பாதிக்கப்படும் என உணர்ந்தார்களோ அவர்களை சமூகத்திற்க இனங்காட்டி அவர்களைப்பற்றி நூல்களிலும் எழுதிவிட்டுச் சென்றார்கள்.

அந்த இமாம்களின் விமர்சனங்களை புறம்பேசியதாக யாரும் கருதுவதில்லை .

மாறாக அதை மார்க்கத்திற்கு செய்த சேவையாகவே எல்லோரும் கருதுகின்றோம்.

எனவே நாம் நமது சுய நலன்களுக்காக யாரைப்பற்றியும் குறைகூறாமல் மார்க்க நலனை மட்டும் கருத்திற் கொண்டு இஸ்லாம் அனுமதித்த வரையரைக்குள் எங்கள் விமர்சனங்களை மட்டுப்;படுத்திக் கொள்வது குற்றமாகாது.

கொள்கையில் உறுதிப்பாட்டையும் தூய்மையான மனேநிலையையும் இஸ்திகாமத்தையும் அல்லாஹ் எமக்கு வழங்கிடுவானாக.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...