ஸஹாபாக்களை இழித்துரைக்கும் ஷீஆக்கள் - இணையம்

கொள்கை அடிப்படையிலும், வணக்க வழிபாடுகள் விடயத்திலும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான சிந்தனைகளைக் கொண்டுள்ள ஷீஆக்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்கள். ஆனாலும், கூடவே இருந்து குழிதோண்டும் தந்திரத்தை 100 வீதம் அவர்கள் பின்பற்றுவதால் அவர்களின் கொள்கைகளையோ, அதன் விளைவுகளையோ முஸ்லிம்கள் அறியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானதாகும்.

அப்துல்லாஹ் இப்னு ஸபாஃ எனும் யெமன் நாட்டைச் சேர்ந்த யூதனைப் பின்பற்றியவர்களான ஷீஆக்கள் பல மோசமானன கொள்கைகளைக் கொண்டிருந்தபோதிலும் ஸஹாபாக்கள் பற்றிய அவர்களின் கொள்கை முக்கியமானதாகும். ஏனெனில், அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் உண்மை என்று நாம் சொல்வதற்கு ஸஹாபாக்களே முதல் சாட்சியங்களாகும். இவர்களை ஒருவன் நம்பிக்கை அற்றவர்கள் என்றோ, பொய்யர்கள் என்றோ சொல்லிவிட்டால் அதற்குப்பிறகு அவர்கள் அறிவித்த குர்ஆனையும் ஹதீஸையும் அவனால் ஏற்க முடியாது.

இதனால் ஸஹாபாக்களை வழிகேடர்கள் என்பவர் நிச்சயம் நேர்வழி பெற்றவராக இருக்கமுடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. எனவேதான் ஷீஆக்களின் ஷைத்தானியத்தான சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள ஸஹாபாக்கள் விடயத்தில் அவர்கள் கொண்டுள்ள கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் சுருக்கமாக இங்கே தெளிவுபடுத்த முயல்கிறோம்.

இது தொடர்பாக ஷீஆக்களின் பிரதானமான நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள அறிவிப்புக்கள் சில பின்வருமாறு-

‘‘ஸஹாபாக்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுக்குப்பிறகு மதம் மாறிவிட்டார்கள்.” (அல்-காபி)

‘‘நான்கு ஸஹாபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான், முஆவியா நான்கு பெண்களான ஆயிஷா, ஹப்ஸா, ஹிந்து, உம்முல் ஹகம், அவர்களை நேசிப்பவர்கள், பின்பற்றியவர்கள் அனைவரை விட்டும் (ஷீஆக்களாகிய) நாம் நீங்குகின்றோம். பூமியில் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் படைப்பில் மிகவும் கெட்டவர்கள்.”

‘‘மறுமையில் நரகம் கொண்டுவரப்படும் அதற்கு 07 வாயில்கள் இருக்கும். முதலாவது வாயில் அபூபக்கருக்குரியது. இரணடாவது வாயில் உமருக்குரியது. மூன்றாவது வாயில் உஸ்மானுக்கு உரியது. நான்காவது வாயில் முஆவியாவுக்கும் ஐந்தாவது வாயில் அப்துல் மலிக்குக்கும் ஆறாவது வாயில் அபூ ஸலமாவுக்கும் உரியது அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு (நரகம் செல்லும்) வாயிலாக அவர்கள் இருப்பார்கள்.” (تفسير العياشي)

ஐயாஸி தனது குர்ஆன் விளக்கவுரையில் ‘‘விடயம் முடிந்தபோது ஷைத்தான் கூறினான்” என்ற பொருள்படும் வசனத்தை விளக்கும்போது ஷைத்தான் என்பது உமராகும். மேலும் குர்ஆனிலே ‘‘ஷைத்தான் கூறினான்” என்று வந்தால் அது ‘‘உமர் கூறினான் என்பதையே குறிக்கும்” என்று குறிப்பிடுகின்றார். (تفسير العياشي)

ஷீஆக்களின் அறிஞரான நபாதி சொல்கிறார் ‘‘விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் தண்டனை வழங்கப்படுவதற்காக (உஸ்மானிடம்) கொண்டுவரப்பட்டாள். அவர் அவளுடன் வீடு கூடினார். பின்பு அவளை கல்லெறிந்து கொல்லுமாறு உத்தரவிட்டார்.” (الصراط المستقيم)

கொமைனி சொல்கிறார் – ‘‘இங்கே அபூபக்கர், உமருடன் எங்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் இருவரும் (கூறிய) குர்ஆனுக்கு முரண்பட்ட கருத்துக்கள், அல்லாஹ்வின் சட்டத்தில் விளையாடியது, அவர்கள் இருவரும் ஹலாலாக்கியதும், ஹராமாக்கியதும், மேலும் அவர்கள் இருவரும் நபியின் மகளான பாத்திமா, அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக செய்த அநியாயங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனாலும், அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் சட்டத்திலும் மார்க்க விடயத்திலும் அறிவீனர்களாக இருந்ததை நாம் இங்கே சுட்டிக் காட்டுகின்றோம்.”(كشف الاسرار)

மேலும் அபூபக்கர் (ரழி), உமர்(ரழி) ஆகியோரைப் பற்றிச் சொல்கிறார் – ‘‘(இவர்கள் இருவரும்) அறிவீனர்கள், அநியாயக்காரர்கள் இவர்களைப் போன்றவர்கள் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள், மேலும் தலைவர்களில் இருப்பதற்கும் தகுதியற்றவர்கள்.” (كشف الاسرار)

ஷீஆக்களிடம் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருவரையும் முழுக்க முழுக்க சபிக்கின்ற ஒரு நீண்ட துஆ உள்ளது. (دعاء لعن صنمي قريش) துஆஉ லஃனி ஸனமை குரைஷ் என்பது அதன் பெயர் அதை ஓதுவதன் சிறப்புப்பற்றி ஷீஆக்கள் சொல்லும்போது

‘‘எவரொருவர் இறைவா, அபூபக்கரையும், உமரையும் சபிப்பாயாக எனும் பிரார்த்தனையை ஒவ்வொரு காலையிலும் ஒரு தடவை ஓதுகின்றாரோ அவருக்கு 70 மில்லியன் நன்மைகளை அல்லாஹ் எழுதுவான் மேலும் 70 மில்லியன் தீமைகளை அழிக்கிறான், அவருக்கு 70 அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படும்.” மேலும் ‘‘அவரின் 70 மில்லியன் தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். நிச்சயமாக அல்லாஹ் விசாலமாக கொடை வழங்குபவன்.” மேலும் ‘‘யார் அவர்கள் இருவரையும் (அபூபக்கரையும், உமரையும்) ஒவ்வொரு காலையிலும் சபிக்கிறாரோ அவர் மாலையாகும் வரை அந்த நாளில் எந்தப்பாவமும் அவருக்கு எழுதப்படமாட்டாது. மேலும் மாலையில் யார் அவர்கள் இருவரையும் சபிக்கிறாரோ அவர் காலையாகும் வரை எந்தப்பாவமும் எழுதப்படமாட்டாது.” (ضياء الصالحين)

உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட நாளை ஷீஆக்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடுகின்றனர். அவரைக் கொலை செய்த நெருப்பு வணங்கியான அபூலுஃலுஆவுக்கு காஸான் எனும் பகுதியில் தங்களின் இமாம்கள் அடக்கப்படும் இடத்தில் ஒரு ஆடம்பர கப்ரை அமைத்து வழிபாடுகளை நடாத்தி வருகின்றனர். உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட நாளின் சிறப்புப் பற்றி பின்வருமாறு அறிவிப்புச் செய்துள்ளனர்.

‘‘ரபீஉல் அவ்வல் மாதத்தின் 09ம் நாளில் (உமர் (ரழி) கொலை செய்யப்பட்ட நாள்) எதையாவது யாராவது செலவு செய்தால் அவரை அல்லாஹ் மன்னிக்கின்றான். அந்த நாளில் சகோதரர்களுக்கு உணவளிப்பதும், மணம் பூசுவதும் அதிகமாக செலவு செய்வதும், புத்தாடை அணிவதும், நன்றி செலுத்துவதும், வணக்கங்களில் ஈடுபடுவதும் விரும்பத்தக்கதாகும். அந்த நாள் கவலைகள் நீங்கிய நாள்.”(المصباح للكفعمي)

ஆயிஷா (ரழி) அவர்களை ஷீஆக்கள் விபச்சாரி என்று வர்ணிக்கின்றனர். (அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக) அதுபோல் நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரழி) அவர்களும், ஹப்ஸா (ரழி) அவர்களும் நஞ்சூட்டிக் கொலை செய்ததாக ஷீஆக்களின் பிரபல்யமான அறிஞர்களில் ஒருவரான ஐயாஸி தனது குர்ஆன் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்.

அன்புக்குரிய சசோதரர்களே! நபிமார்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் ஸஹாபாக்கள்தான் என்பதை உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளவனும் தெரிந்துகொள்வான். அவர்கள் மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள் நாம் எல்லோரும் அறிந்தவை.

குர்ஆனிலும், ஸுன்னாவிலும் அவர்களின் சிறப்புக்கள் அதிகமான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சுவர்க்கவாதிகள் என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட சிறப்புக்குரியவர்களை ஷீஆக்கள் எப்படி வர்ணிக்கிறார்கள் என்பதை நீங்கள் இதுவரை வாசித்தீர்கள். நாம் குறிப்பிட்டவை ஸஹாபாக்கள் பற்றி அவர்கள் சொல்வதோடு ஒப்பிட்டால் கடுகளவுதான். இவர்களிடம் பொருளும், தொழிநுட்ப முன்னேற்றமும், கலைத்துறை ஈடுபாடும், நல்ல நடிப்பும் இருக்கிறது என்பதற்காக இனியும் நாம் இவர்கள் விடயத்தில் ஏமாந்துவிடக்கூடாது.

எனவே! இதுபோன்ற ஷீஆக்களின் மறைக்கப்பட்டுள்ள ஆபத்தான கொள்கைகளை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி நமது ஈமானையும் மற்றவர்களின் ஈமானையும் பாதுகாக்க மறுமையில் ஈடேற்றம் பெற அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...