ஸஹாபாக்கள் பற்றிய ஷீஆக்களின் கொள்கைள் (பகுதி 03) - ஏனைய ஸஹாபாக்கள் பற்றி ஷீஆக்கள்.

நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்போது ஸஹாபாக்கள் நபியவர்களுடன் நடித்துக்கொண்டு முனாபிக்குகளாக இருந்ததாகவும், நபியவர்களின் மரணத்தின்பின்பு அவர்கள் அனைவரும் காபிர்களாக மாறிவிட்டதாகவும் ஷீஆக்களின் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஷீஆக்களின் முக்கியமான அறிஞர்களில் ஒருவரான துஸ்திரி என்பவர் ‘இஹ்காகுல் ஹக்கி வ இஸ்ஹாகுல் பாதில்’ என்ற நூலிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘‘நிச்சயமாக அவர்கள் (ஸஹாபாக்கள்) உண்மையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக நபியவர்களின் தலைமைத்துவத்தில் ஆசை கொண்டதின் காரணமாகத்தான் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள், அவர்கள் அனைவரும் நயவஞ்சகத்துடனேயே இருந்தார்கள்.’’

காஷானி என்பவர் குறிப்பிடும்போது: ‘‘ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் நயவஞ்சகத்தை மறைத்து வைத்துக்கொண்டே இருந்தார்கள், அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவர்களாகவும், நபியவர்கள் மீது இட்டுக்கட்டுபவர்களாகவும் இருந்தார்கள்.’’ (தப்ஸீருஸ்ஸாபி) இவர்களின் குமைனி தனது ‘அல்ஹுகூமா அல்இஸ்லாமிய்யா’ என்ற நூலில் ஸஹாபாக்கள் முனாபிக்குகள் என்று குறிப்பிடுகின்றார்.

நபியவர்கள் வாழும்போது இப்படி இருந்தவர்கள் நபியவர்கள் மரணித்த பின்பு காபிர்களாக மாறிவிட்டனராம்.

ஷீஆக்களின் அறிஞர்களில் ஒருவரான முஹம்மது ரிழா அல்முழப்பர் சொல்கிறார்: ‘‘நபியவர்கள் மரணித்தபோது ஸஹாபாக்கள் அனைவரும் இஸ்லாத்தை விட்டு சென்றுவிட்டனர்.’’ (அஸ்ஸகீபா)

துஸ்துரி எனும் ஷீஆக்களின் மற்றுமொரு அறிஞர் குறிப்பிடுகின்றார்: ‘‘நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அதிகமான மனிதர்களுக்கு நேர்வழி காட்டினார்கள், என்றாலும் அவரின் மரணத்தின் பின்பு அவர்கள் மதம் மாறிவிட்டனர்.’’ (இஹ்காகுல் ஹக் வ இஸ்ஹாகுல் பாதில்)

முக்கிய குறிப்பு:

அன்புக்குரிய சகோதரர்களே, ஒரு மனிதன் எதற்காக நடிக்கவேண்டும்? தலைமைத்துவத்திற்காக நடிக்கலாம், புகழுக்காக நடிக்கலாம், சுய பாதுகாப்புக்காக நடிக்கலாம், தனது சொத்துக்காக அல்லது பிறருடைய சொத்தை அபகரிப்பதற்காக நடிக்கலாம், அல்லது தனது இடத்தில் இருப்பதற்காக நடிக்கலாம். இதற்கப்பால் நடிப்பதற்கு ஒரு காரணம் இருக்க முடியாது.

ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக ஒரு மனிதன் நடிப்பதற்குரிய அத்தனையையும் இழந்தார்கள். தலைமைத்துவம், மானம், பொருள், உயிர், சொந்தங்கள், நாடு என்று எல்லாம் இஸ்லாத்தை ஏற்றதினால் அவர்களிடம் இல்லாமல் போனது என்பதை ஸஹாபாக்களின் வரலாற்றை சிறிதளவு வாசிப்பவர் கூட தெளிவாக அறிந்துகொள்வார்.

ஆனால் இந்த நாசகாரக்கூட்டம் இஸ்லாம் என்று பொதுமக்களிடம் எத்தகைய கருத்துக்களை விதைக்கிறது பாருங்கள்! இதையும் எமது சமுதாயத்தில் பலர் ஆதரிப்பதுதான் விந்தையாக இருக்கிறது. அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழிகாட்டப்போதுமானவன்.

உண்மையில் ஸஹாபாக்களுக்கு எதிரான இவர்களின் இத்தகைய கருத்துக்கள் நிச்சயமாக இவர்கள் முஸ்லிம்களாக இருக்கவே முடியாது, முஸ்லிம்களைக் குழப்புவதற்கு முஸ்லிம்களாக நடிக்கும் வேடதாரிகளாகவும், அப்படியானவர்களின் கைக்கூலிகளாகவுமே இருக்கமுடியும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

இவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்களை ஏற்பதில்லை:

ஷீஆக்களின் கருத்தின்படி ஸஹாபாக்கள் இவ்வாறு மோசமானவர்களாக இருப்பதன் காரணமாகவும். காபிர்களாக இருப்பதனாலும், அவர்கள் நபியவர்கள் சொன்னதாகச் சொல்லும் எந்த செய்தியையும் ஷீஆக்கள் ஏற்பதில்லை. மாறாக அஹ்லுல் பைத்துகள் சொன்னதாகச் சொல்லப்படும் செய்திகளையே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஸஹாபாக்கள் பற்றி ஷீஆக்கள் அதிகமாக பொய்யுரைத்திருப்பதன் இலட்சியமே இதுதான். அதாவது

தங்களின் கொள்கையை விதைக்கவேண்டும் என்பதற்காக, இருக்கும் கொள்கையை இல்லாமலாக்கவும், அதைச் சொல்பவர்களை குற்றவாளிகளாக்கவும் முயற்சிக்கின்றனர்.

ஸஹாபாக்கள்தான் அல்குர்ஆன் அல்ஹதீஸுக்கான எமது ஆதாரங்கள். அவர்கள் பிழை என்று ஆகிவிடுமானால் நாம் அல்குர்ஆனையோ ஹதீஸையோ ஆதாரமாகக் கொள்ள முடியாது. இதையே ஷீஆப் போக்கிரிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால்தான் ஸஹாபாக்களில் யாரெல்லாம் கூடுதலாக ஹதீஸை அறிவித்திருக்கின்றார்களோ, அவர்களை சற்று கூடுதலாக ஷீஆக்கள் விமர்சிக்கின்றனர்.

இன்ஸாஅல்லாஹ் வல்ல நாயன் அல்லாஹ் இவர்களின் முகத்திரையைக் கிழித்து இவர்களின் உண்மை நிலையை தன் அடியார்களுக்கு தெளிவுபடுத்துவான்

நன்றி - இணையம்


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...