ஏகத்துவ வியாபாரிகள் - ஆசிரியர் பஹீம் தாலிப்

குர்ஆன் சுன்னாவை பேசுபவர்கள் பலர் வெளிநாட்டு நிறுவனங்களில் பணம் பெற்றுக்கொண்டு பல அமைப்புகளை நிறுவி அதனைக் கொண்டு குர்ஆன் சுன்னா அடிப்படையிலான இஸ்லாமிய வளர்ச்சிக்கு பல உதவிகள் செய்து வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் அண்மைக்காலமாக இவர்களின் இந்த புனிதமான நோக்கத்தில் ஷைத்தானின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இத்தகைய நிலையங்கiளின் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் இருப்பவர்கள் சாதாரண பொது மக்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இவர்கள் மார்க்கத்தை கற்றுத் தேர்ந்த மௌலவிமார்கள் என்பது தான் வருத்தத்துக்குரிய விடயமாகும்.

இத்தகையவர்கள் நாங்கள் குர்ஆன் சுன்னா வழி நடப்பவர்கள் என்ற முத்திரையுடன் இயங்குவதால் இது போன்ற பணிகளை தூய்மையான முறையில் செய்பவர்களும் கூட இவர்களின் செயலால் கெட்டபெயர் சுமத்தப்படுகிறார்கள்.

குர்ஆன் சுன்னாவை பேணி நடப்பவர்கள் இவர்களிடம் தங்கள் பகுதியில் பள்ளிவாயில் கட்டி கேட்டால் மறுக்கும் இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடய பணத்தை எந்த நோக்கத்துக்காக வழங்குகின்றனவோ அதற்கு முற்றிலும் மாற்றமான முறையில் ஷிர்க் பித்அத் வாதிகளுக்கு பள்ளிவாயில்களை அமைத்துக் கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் மக்களுக்கு சிறிதளவு உதவி செய்து விட்டு பெரிதளவில் போட்டோக்களாகவும் பெனர்களாகவும் புகழ் சேர்க்கும் விடயங்கள் தான் அதிவளவில் செய்கிறார்கள்.

இதில் ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் குர்ஆன் சுன்னா தஃவாப் போர்வையில் அரசியலும் செய்கிறார்கள். ஷிர்க் பித்அத் செய்யும் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து டீவி பத்திரிகை போன்ற மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து புகழைத் தேடுகின்றனர். இவர்களும் குர்ஆன் சுன்னா மௌலவிகளாம்.

சீதனத்தை அனுமத்த குர்ஆன் சுன்னா போர்வைக்குள் இருக்கும் சில உலமாக்களின் தவறுகள் தெரிந்தும் கூட இந்த அமைப்புக்கள் அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு அவர்களுக்கு பண உதவிகள் செய்வதும் அவர்களுடய பொறுப்பில் பள்ளிகள் கட்டிக் கொடுத்து அவர்கள் மூலமாக இத்தகைய தவறான மார்க்கப் போதனைகளை மென்மேலும் மக்கள் மத்தியில் பரப்ப வழி செய்து கொடுக்கிறார்கள்.

இவர்கள் செய்யும் பிழைகள் சில மௌலவிமார்களுக்கு புரிந்தாலும் எங்கே இவர்களின் ஆதரவு இல்லாது போய்விடுமோ எனும் அச்சத்தின் காரணமாக காந்தத்தில் ஒட்டிய இரும்பு துகள் போல் அவர்களும் இவர்களுடய பிழைகளுக்கு துணை போகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அந்தப்பணத்தை தங்கள் சுய தேவைகளுக்காகவும் வியாபரங்களுக்காவும் பயன்படுத்தி இத்தகைய அமைப்புகளின் அடிப்படையையே மாற்றி வியாபார ஸ்தலங்களாக மாற்றி வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இந்த அமைப்புகளின் தலைவர்கள் இப்படி வரும் பணத்தில் தங்களுக்கும் தங்கள் சகாக்களுக்கும் மக்களுக்கு போய் சேரவேண்டிய பெறும் பகுதியை சம்பளமாக கணக்கு காட்டி தங்கள் பொக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்.

பிழைப்பதற்கு ஆயிரம் வழிகளை ஹலாலான முறையில் அல்லாஹ் காட்டித்தந்திருக்க புனிதமான தஃவாவை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கிறார்கள்.

தவ்வா என்ற பெயரால் நடக்கும் இத்தகைய அனியாயங்களுக்கு எப்படித்தான் இவர்கள் அல்லாஹ் தஆலாவின் முன்னிலையில் கணக்கு கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

பாமரன் செய்யும் பிழைகளுக்கு கிடைக்கும் கூலியை விட பண்மடங்கு அதிகமாகவல்லவா மார்க்கத்தை படித்த இந்த மௌலவிமார்களுக்கு கிடைக்கும் யோசிப்பார்களா இவர்கள்?

நான் கடைசியாக சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் இத்தகைய அமைப்புகளினால் தான் இன்று குர்ஆன் சுன்னா பேசக்கூடியவர்கள் ஒற்றுமையின்றி சிதறுண்டு சின்னாப்பின்னமாகி போய் மற்றவர்களின் நகைப்புக்கும் கேளிக்கும் ஆளாகி விட்டிருக்கிறார்கள். இத்தகைய அமைப்புக்கள் களையப்பட்டால் தான் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக தஃவா செய்ய முடியும்.

ஹதீஸ் புகாரி

7138 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.

நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்